தனுஷ் மீது புகார் கொடுத்த பிரபல பாடகி.. எல்லாம் பயில்வான் பண்ற வேலை

யூடியூப் சேனல் மூலம் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி பொய்யான தகவலை பரப்பி வருபவர் பயில்வான் ரங்கநாதன். இதனால் திரை பிரபலங்கள் பலரும் இவரது யூடியூப் சேனலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ராதிகா, கஸ்தூரி போன்ற நடிகைகளும் பயில்வானை திட்டி தீர்த்தனர்.

ஆனாலும் எதற்கும் அசராமல் பயில்வான் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பாடகி சுசித்ரா பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதனால் கோபம் அடைந்த சுசித்ரா தொலைபேசி வாயிலாக பயில்வான் தொடர்புகொண்டு விளாசி எடுத்தார்.

அதற்கு பயில்வான் எனக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து வந்த தகவலின் படி தான் இப்படி கூறியதாக கூறினார். யாரிடமும் பணம் வாங்கித்தான் நீங்கள் இப்படி பேசி உள்ளீர்கள் நான் போலீசில் புகார் அளிக்கயுள்ளேன் என சுசித்ரா கூறியிருந்தார்.

இந்நிலையில் சில பேரின் தூண்டுதல் காரணமாக பயில்வான் இப்படிப் பேசியுள்ளார் என்று சுசித்ரா புகார் அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சுசித்ரா இணையத்தில் சிலரின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இதில் தனுஷ், திரிஷா, டிடி என பல பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. அப்போது சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் தற்போது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு சுசித்ரா மற்றும் கார்த்திக் குமார் இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் தற்போது தனுஷ், இயக்குனர் வெங்கட் பிரபு, சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஆகியோர் மீது சந்தேகம் உள்ளதாக சுசித்ரா புகார் அளித்துள்ளார். இவர்களை விசாரித்தால் உண்மை தெரியும் அந்த புகாரில் சுசித்ரா குறிப்பிட்டுள்ளார்.

The post தனுஷ் மீது புகார் கொடுத்த பிரபல பாடகி.. எல்லாம் பயில்வான் பண்ற வேலை appeared first on Cinemapettai.