தப்பு பண்ணியதால் பைத்தியம் முத்தி போன வெண்பா.. கல்யாணத்தை நிறுத்த இப்படி ஒரு சதியா?

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான பாரதிகண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவின் ஆட்டத்தை அடக்குவதற்காக சௌந்தர்யா, ரோஹித்துடன் வெண்பாவிற்கு நிச்சயதார்த்தத்தை நடத்தி முடிக்கிறார்.

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு ஹோட்டலில் தங்கிய வெண்பா, அங்கு அவர் கண் முன்பு குடித்துக்கொண்டிருந்த ரோஹித் உடன் சேர்ந்து குடிக்கிறார். போதையில் இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்து விடுகின்றனர்.

Also Read: பாரதியால் குடிபோதையில் கற்பை இழந்த வெண்பா!

போதை தெளிந்த பிறகு தப்பு செய்ததை நினைத்து, வெண்பா தாங்கிக் கொள்ள முடியாமல் பைத்தியம் பிடித்தது போல் கத்துகிறார். பிறகு வேலைக்காரி சாந்தியிடம் நடந்ததை சொல்லி வெண்பா அழுது புலம்புகிறார்.

இதன் பிறகு இந்த சம்பவத்தையே காரணமாக வைத்துக்கொண்டு, ரோஹித் தன்னிடம் தவறாக நடந்ததாக சொல்லி இந்தக் கல்யாணத்தை நிறுத்துவதற்கு சதித் திட்டம் தீட்டுகிறார். மேலும் ரோஹித்தை தலை குனிய வைக்க நினைக்கும் வெண்பா, மறுபடியும் பாரதியை சுற்றிசுற்றி வரப்போகிறார்.

Also Read: விருமன் படத்தால் விஜய் டிவிக்கு நடந்த துரோகம்

ஒருகட்டத்தில் கர்ப்பமாக இருக்கப்போகும் வெண்பா, அந்தக் குழந்தைக்கு அப்பா பாரதி என்றும் கைகாட்ட போகிறார். இப்படி கேடுகெட்ட கதைக்களத்தை கொண்ட பாரதிகண்ணம்மாசீரியலை சின்னத்திரை ரசிகர்கள் கழுவிக் கழுவி ஊற்றியுள்ளனர்.

ஏற்கனவே தனக்குப் பிறந்த இரண்டு மகள்களை வேறு ஒருவருக்கு பிறந்ததாக நினைத்து சந்தேகப் பேய் பிடித்து ஆடும் டாக்டர் பாரதி, டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்க்க முடியாத முட்டாள் மருத்துவராக இருக்கிறார். தற்போது வேறு ஒருவனுக்கு பிறக்கப்போகும் குழந்தையும் பாரதியின் குழந்தை என்று வெண்பா பாரதியை நம்ப வைத்தாலும் அதற்கு ஆச்சரியப்படுவதற்கில்லை.

Also Read: நடிகைகளை தாண்டி மனதில் பதிந்த 7 கதாபாத்திரங்கள்