தற்பெருமையில் தலைகால் புரியாமல் ஆடும் நயன்தாராவின் மாமியார்.. எல்லாம் காசு படுத்துற பாடு!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் சர்ச்சையும் கடந்து கொண்டே இருக்கிறது. முதலில் காதல் பிரச்சனை முடிந்து ஒரு வழியாக விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் பல கட்டுப்பாடுகள் விதித்ததால் அதிலும் ஏகப்பட்ட பிரச்சனைகளை நயன்தாரா சந்தித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதால் இணையத்தில் இந்த விஷயம் பூதாகரமாக வெடித்து பிரளயத்தையே ஏற்படுத்துகிறது. இவ்வாறு ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனை என்றாலும் நயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக தான் வலம் வருகிறார்.

Also Read : ஒரு டசன் படம் கையில் இருந்தும் கேஜிஎப் கூட்டணியில் இணையும் நயன்தாரா.. பணத்தாசையால் தவிக்கும் தயாரிப்பாளர்கள்

இப்போது நயன்தாராவின் மாமியார் அதாவது விக்னேஷ் சிவனின் தாயார் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்துள்ளார். அதில் நயன்தாராவை பற்றி ஆகா ஓகோ என்று தற்பெருமை பேசியுள்ளார். அதாவது நயன்தாராவின் வீட்டில் 8 வேலையாட்கள் உள்ளனர்.

ஒரு நாள் அதில் ஒரு அம்மாவின் முகத்தை பார்த்து நயன்தாரா என்ன பிரச்சனை என்று கேட்டவுடன் பண நெருக்கடியை கூறியுள்ளார். உடனே 4 லட்சம் பணத்தை நயன்தாரா தூக்கிக் கொடுத்ததாக அவரது மாமியார் கூறியுள்ளார். இதற்கு ஒரு படிமேலாக நயன்தாராவின் அம்மா தங்க வளையலையே வேலைக்காரர்களுக்கு கொடுத்ததாக பேசி உள்ளார்.

Also Read : நயன்தாராவுக்கு டைம் கிடைச்சா, கூட நடிக்க வரணுமா? லாரன்ஸை நிஜ சந்திரமுகியாக மாற்றிய லேடி சூப்பர் ஸ்டார்

யாரும் இதுபோல பெரிய உதவி எதுவும் செய்யாமல் நயன்தாரா மட்டும் உதவி செய்தது போல அவர் பாவித்து பேட்டி கொடுத்துள்ளார். அதாவது நயன்தாராவின் திருமணத்தின் போது கூட அவரது மாமியார் எந்த பேட்டியும் கொடுக்க இல்லை.

ஆனால் இப்போது ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பதற்கு காரணம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் வேலையாக இருக்கும் என்ற கோணத்தில் பத்திரிக்கையாளர்கள் கேட்டு வருகிறார்கள். நயன்தாரா தனது படத்தின் விளம்பரத்திற்காக கூட இப்படி செய்வார் என பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : டிஆர்பிக்காக நயன்தாராவை வம்பிழுக்கும் விஜய் டிவி.. இதே வேலையா தான் இருப்பாங்களோ!

The post தற்பெருமையில் தலைகால் புரியாமல் ஆடும் நயன்தாராவின் மாமியார்.. எல்லாம் காசு படுத்துற பாடு! appeared first on Cinemapettai.