தலைவர் படத்தை அட்டை காப்பியடித்த வாரிசு படக்குழு.. இணையத்தில் கேலிக்கூத்தான தளபதி

இன்று விஜய்யின் பிறந்த நாள் என்பதால் அவரது ரசிகர்கள் இந்த நாளை திருவிழாபோல் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இந்நிலையில் வாரிசு படத்தின் இரண்டாம் போஸ்டர் இன்று வெளியாகி கேலிக்கூத்தாக உள்ளாகியுள்ளது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். இப்படம் குடும்ப சென்டிமென்ட் மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் இப்படத்தில் அதிக ஆக்ஷன் காட்சிகள் இடம்பெறாது என கூறப்படுகிறது. இரண்டாம் போஸ்டரில் ஒரு சரக்கு லாரியில் விஜய் குழந்தைகளுடன் ஆகாயத்தை பார்ப்பது போன்ற போஸ்டர் வெளியாகியிருக்கிறது. இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த போஸ்டர் சந்திரமுகி படத்தில் ரஜினி மாட்டுவண்டியில் படுத்துக்கொண்டு ஆகாயத்தைப் பார்ப்பார். அச்சு அசலாக வாரிசு படத்தில் விஜய் அதேபோல போஸ் கொடுத்துள்ளார். இதனால் தலைவர் ஸ்டைலை அப்படியே வாரிசு படக்குழு காப்பி அடித்து உள்ளது என இணையத்தில் கேலி, கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

இதனால் ரஜினி ரசிகர்கள் தற்போது விஜய்யை வறுத்தெடுத்த வருகின்றனர். மேலும் கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளியான பீஸ்ட் படமும் இணையத்தில் மீம்ஸ் மற்றும் ட்ரோல்களுக்கும் உள்ளான நிலையில் தற்போது விஜய்யின் வாரிசு படத்திற்கும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது.

Rajini-vijay

மேலும் இயக்குனர் அட்லி தான் பல படங்களிலிருந்து காப்பியடித்த தனது படத்தை இயக்குவார். ஆனால் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சியும் இப்படி செய்கிறாரே என பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனால் தற்போது இணையத்தில் விஜய் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே போர்க்களமாக உள்ளது.