தளபதி-67 படத்தில் சஸ்பென்ஸ் வைத்த லோகேஷ்.. மல்டி யுனிவர்ஸ் படமா!

தமிழ் சினிமாவில் சில படங்களை மட்டுமே சில படங்களை மட்டுமே இயக்கினாலும் அவர் கையில் எடுப்பதெல்லாம் பெரிய பெரிய நடிகர்கள் என்பதால் வெகு சீக்கிரமே தமிழ் சினிமாவின் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறார். இவருடைய இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி பிறகு தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் அதன்பின் தற்போது திரையரங்கில் பின்னிப் பெடல் எடுத்துக்கொண்டிருக்கும் கமலஹாசனின் விக்ரம்.

இவ்வாறு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் அடுத்த படமான தளபதி விஜய்யின் 67-வது படத்தை இயக்கவுள்ளார். தளபதியின் 66-வது படத்தை வம்சி சென்டிமெண்ட் படமாக இயக்கி கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தளபதியின் 67-வது படம் பக்கா ஆக்ஷன் திரைப்படமாக உருவாக்க உள்ளதாக லோகேஷ் தற்போது அறிவித்திருக்கிறார்.

இதனால் தளபதியின் 66-வது படத்தை விட 67-வது படத்தை குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர். மேலும் லோகேஷ் படங்களில் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி ஹீரோவான ஒருவரை மட்டுமே வைத்து இயக்க மாட்டார்.  அப்படித்தான் இவருடைய படங்களான கைதி படத்தில் நரேன் கார்த்தி. அதைத்தொடர்ந்து மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் விஜய் சேதுபதி தற்போது வெளியாகி எடுக்கும் விக்ரம் படத்தில் கமலஹாசன்-விஜய் சேதுபதி-பகத் பாசில்-சூர்யா என பல பிரபலங்களை தன்னுடைய ஒரே படத்தில் நடிக்க வைத்திருப்பார்.

லோகேஷ் கனகராஜ்-இன் இந்த அணுகுமுறை ஒவ்வொரு ஹீரோவுக்கும் தனித்தனியாக இருக்கும் ரசிகர்களை ஒன்று சேர்ப்பது சினிமாவில் வித்தியாசமான அணுகுமுறையாக இருக்கிறது. இப்படி லோகேஷ் படங்களில் பல்வேறு பிரபலங்களை இணைப்பது மட்டுமல்லாமல் கைதி படத்தில் இருக்கும் ஒரு சில கதாபாத்திரத்தை விக்ரம் படத்தில் கொண்டு வந்தார்.

இதனால் விக்ரம், கைதியின் இரண்டாம் பாகம் எனவும் சொல்லப்பட்டது. லோகேஷ் படங்களில் ஒரு சில ஒற்றுமைகள் தொடர்கதையாகுவதால், ‘லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (Lokesh Cinematic Universe-LCU)’ என்ற பெயருடன் இனி வரும் காலங்களில் கைதி, விக்ரம் படங்களின் தொடர்ச்சியாகவோ அதன் கதாபாத்திரங்கள் தொடர்ச்சியா தொடர்பாகவோ படம் எடுத்தால், அதில் ‘லோகேஷ் சினிமாட்டிக் இனி யுனிவர்ஸ்(LCU)’ என்ற பெயரை பயன்படுத்துவேன் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதனால் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகும் தளபதி 67- வது திரைப்படம் மல்டி யுனிவர்ஸ்(LCU) படமா அல்லது தனித்த படமா என்பதை விரைவில் அறிவிப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு தளபதி 67 படத்தில் கூடுதல் சஸ்பென்ஸை வைத்திருக்கும் லோகேஷ் நிச்சயம் விக்ரம் படத்தை விட பிரமாண்டமாக உருவாக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.