திரிஷாவை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்.. எல்லாம் நயன்தாராவால் வந்த வினை

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை தனது யூடியூப் சேனல் மூலம் விமர்சனம் செய்பவர் ப்ளூ சட்டை மாறன். அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தை மிக மோசமாக விமர்சித்ததால் இவர் சர்ச்சைக்கு உள்ளானார். இந்நிலையில் தற்போது த்ரிஷாவை பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

திரிஷா சினிமாவுக்கு வந்த பல வருடங்கள் ஆனாலும் தற்போது வரை ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான 96 படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது திரிஷாவுக்கு 39 வயதை எட்டியுள்ளது. இந்நிலையில் இவருக்கு திருமணம் எப்போது என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கெனவே வருண் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணம் வரை செல்லாமல் நின்றுபோனது. இதைத் தொடர்ந்து நடிகர் ராணா டகுபதியை காதலித்து வந்தார்.

இதுவும் கடைசியில் கைகூடாமல் போனது. இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னுடைய பலவருட காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துள்ளார். நயன்தாராவும் ஆரம்பத்தில் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார்.

ஆனால் கடைசியில் சுதாகரித்துக் கொண்டு விக்னேஷ் சிவனை மணம் முடித்துள்ளார். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், என்னம்மா திரிஷா நீ எப்ப கல்யாண சாப்பாடு போட போற, வயதாகிவிட்ட போகுதா இல்லையா என்ற கமெண்டை பதிவிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் படங்களை மட்டுமே விமர்சித்து வந்த ப்ளூ சட்டை மாறன் தற்போது நடிகைகளையும் விமர்சித்து வருகிறார். இப்படியே போனால் அடுத்த பயில்வானாக ப்ளு சட்டை மாறன் மாறிவிடுவார் என ரசிகர்கள் கமெண்டுகளை தெறிக்கவிட்ட வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.