திருமண தேதியை உறுதிசெய்த கௌதம் கார்த்திக்.. மஞ்சிமாவை காதலிக்க இப்படி ஒரு காரணமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திருமண தேதியை அறிவித்த கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன். மஞ்சிமா மோகனை கௌதம் கார்த்திக் காதலிக்க இதுதான் காரணம்.

இன்றைய கோலிவுடின் ஹாட் டாப்பிக்காக இருக்கும் நட்சத்திர ஜோடிகள் தான் கௌதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும். இவர்கள் இருவரும் காதலிப்பதாக பல மாதங்களுக்கு முன்பே அரசல் புரசலாக பேசப்பட்டது. இதுவரை வதந்தியாக இருந்த இவர்களது காதல் இப்போது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

எண்பது, தொண்ணூறுகளில் நவரச நாயகனாக வலம் வந்த நடிகர் கார்த்திக்கின் மகன் தான் கௌதம் கார்த்திக். இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ‘கடல்’ என்னும் படத்தின் மூலம் ஹீரோ ஆனார். நடிகை மஞ்சிமா மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

Also Read: திருமணத்திற்கு தேதி குறித்த ஜோடி.. காதலியை கரம் பிடிக்க போகும் கௌதம் கார்த்திக்

கௌதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் இணைந்து, இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘தேவராட்டம்’ படத்தில் இணைந்து நடித்தனர். ஞானவேல் ராஜா தயாரித்த இந்த படம் மிகப்பெரிய கமர்சியல் ஹிட் ஆனது. இந்த படம் ஏப்ரல் மாதம் 2019 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதன்பின்னர் இவர்கள் இருவரும் நட்பாகவே பழகிவந்தனர்.

இதற்கிடையில் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற வதந்தி வந்த போது கௌதம் கார்த்திக் அதை பற்றி எந்த பதிலும் அளிக்காத நிலையில், மஞ்சிமா மோகன் தங்களுக்குள் காதல் இல்லை என மறுத்திருந்தார். இந்நிலையில் கடந்த மாத இறுதியில் இவர்கள் இருவரும் சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தினர்.

Also Read: நல்ல வாய்ப்பு கிடைத்தும் கௌதம் கார்த்திக்கு ஓடாத 5 படங்கள்.. அப்பா அளவிற்கு வளர முடியாமல் போன துரதிர்ஷ்டம்

இந்நிலையில் இவர்கள் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கின்றனர். கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகனுக்கு வரும் நவம்பர் 28ஆம் தேதி திங்கள் அன்று திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்கள் திருமணம் குறித்து இரு வீட்டு பெற்றோருக்கும் ரொம்ப மகிழ்ச்சி என்றும், திருமணம் ரொம்பவும் எளிய முறையில் நடக்க இருப்பதாகவும், திருமண புகைப்படம் அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு மேல் வெளியாகும் என்றும் சொல்லியிருக்கின்றனர்.

ஒரு வருட நட்பிற்கு பிறகு, கௌதம் கார்த்திக் தான் முதலில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். மஞ்சிமா இரண்டு நாட்கள் கழித்து காதலுக்கு ஓகே சொல்லியிருக்கிறார். மேலும் மஞ்சிமா அழகானவர் என்பதை தாண்டி நான் சோர்ந்து போன நாட்களில் எனக்கு ஆறுதலாக இருந்து இருக்கிறார். அதுதான் நான் அவரை காதலிக்க காரணம் என்று கௌதம் கூறியிருக்கிறார்.

Also Read: விட்ட இடத்தை பிடிக்க போராடும் கௌதம் கார்த்திக்.. வரிசை கட்டி நிற்கும் நான்கு படங்கள்!