தேசிய விருது இயக்குனர் உடன் கூட்டணி போடும் தளபதி.. வசூல் கன்பார்ம் ஆனா விருதுக்கு வாய்ப்பில்ல

பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது படுவேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் தளபதியின் பிறந்த நாள் அன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தை அடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த தகவலை லோகேஷ் சில நாட்களுக்கு முன்பு மீடியாவில் கூறினார். விக்ரம் திரைப்படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்த லோகேஷ் கனகராஜ், விஜய்யுடன் இணைவது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை அடுத்து விஜய் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைய இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இவர் தமிழ் சினிமாவில் ஆடுகளம், அசுரன், வட சென்னை போன்ற பல திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.

மேலும் தரமான கதைக்காக இவர் தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கியிருக்கிறார் அந்த வகையில் விஜய்யுடன் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்பது இவருடைய நீண்ட நாள் ஆசை. இதை அவரே பலமுறை பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இவர் விஜய்க்காக ஒரு கதை தயார் செய்து அது சில காரணங்களால் நடைபெறாமல் போனது. அதன் பிறகு விஜய் நிச்சயம் நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று அவருக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் இப்போது வெற்றிமாறன், விஜய்க்காக ஒரு சூப்பரான கதையை தயார் செய்து இருக்கிறார்.

மேலும் வெற்றிமாறன் தற்போது விடுதலை திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அதை முடித்துவிட்டு அவர் விஜய்யுடன் இணைய இருக்கிறார் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியான தகவலாக இருக்கிறது. அடுத்த வருடத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.