நந்தினி, குந்தவை கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகைகள்.. சிஷ்யைக்கு சிபாரிசு செய்த மணிரத்னம்

கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகி திரையரங்கில் வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் இந்திய திரைப் பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்திற்காக மணிரத்தினம் நீண்ட நாட்களாக ஆர்டிஸ்ட்களை தேர்வு செய்து வந்தார். இதற்காக பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்குவதற்கு முன்பே, ஒவ்வொருவரையும் தேர்வு செய்யும் மணிரத்னம் அவர்கள் நடித்தால் எப்படி இருக்கும் என மனதில் கற்பனை செய்த பிறகே தேர்ந்தெடுத்திருக்கிறார்.

Also Read : பொன்னியின் செல்வனை கண்டுக்காத கமல், ரஜினி.. சைலன்டாக ஆட்டி வைக்கும் பெரிய இடம்

அதாவது நந்தினி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், குந்தவை கதாபாத்திரத்தில் ஜோதிகாவையும் யோசித்து வைத்திருந்த லைக்காவிடம், ஆர்டிஸ்ட் பெயரை சொல்லும் போது முன்கூட்டியே மணிரத்தினம், ‘ஒருத்தர் நடிக்கிறார் அது மட்டும் உறுதி’ என்று அந்த நபருக்கு மட்டும் எந்தவித லுக் மற்றும் க்ரீன் டெஸ்ட் செய்யாமல் தேர்வு செய்திருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் மற்ற நடிகர்களை தேர்வு செய்வதற்கு முன்பே மணிரத்தினம் மனதில் உள்ள ஒரு நடிகை ஐஸ்வர்யா ராய். பல மேடைகளில் ஐஸ்வர்யா ராய் மணிரத்னத்தை தனது குரு என்று பெருமைப்படுத்தி இருக்கிறார். சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லாம் ஐஸ்வர்யா ராய் இதையே பலமுறை சொல்லியிருக்கிறார்.

Also Read : 4 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா.. பொன்னியின் செல்வன் ஹாட்ரிக் வெற்றி

கோலிவுட்டை பொறுத்தவரை ஐஸ்வர்யா ராய்க்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்த மணிரத்னம் எப்போதுமே அவருக்கு குருவாகவே இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். அதேபோன்றுதான் மணிரத்னமும் தன்னுடைய கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான நந்தினி என்ற கேரக்டரை முன்கூட்டியே ஐஸ்வர்யா ராய்க்கு ஒதுக்கி வைத்திருக்கிறார்.

மேலும் நந்தினி கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராயை மணிரத்னம் சிபாரிசு செய்து நேரடியாக தேர்வு செய்ததால், நயன்தாராவை படத்தில் இருந்து தூக்கினார். அதன் பிறகு குந்தவை கதாபாத்திரத்திற்காக ஜோதிகா மற்றும் த்ரிஷா இருவருக்கும் லுக் மற்றும் கிரீன் டெஸ்ட் செய்ததில், சுமார் 50 லுக் டெஸ்ட்க்கு பிறகு த்ரிஷாவுக்கு குந்தவையாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

Also Read : உச்சகட்ட எதிர்பார்ப்பில் வெளிவர உள்ள 8 படங்கள்.. பிரம்மாண்டத்தை எதிர்நோக்கி பொன்னியின் செல்வன் 2ம் பாகம்