நம்ம ரேஞ்ச் காட்டணும்.. புத்தியை தீட்டு சிவகார்த்திகேயன் செய்யும் தில்லாலங்கடி வேலை

சிவகார்த்திகேயன் படிப்படியாக தனது சினிமா கேரியரில் எங்கேயோ செய்து விட்டார் என்றே கூறலாம். தவிர்க்க முடியாத ஹீரோக்களில் இருப்பவர். இப்பொழுது அவர் ஒரு பெரிய திட்டம் தீட்டி வருகிறார். மற்ற ஹீரோக்களைப் போல நமக்கும் ஒரு தனி பெயர் வேண்டும் என சிவகார்த்திகேயன் மனதில் ஆசை விழுந்துவிட்டது.

நமக்கும் ஒரு மாஸ் ஓப்பனிங் வேண்டும் என்று யோசித்து புத்தியை தீட்டு பல விஷயங்களை செய்து வருகிறார். அதன் முதல் கட்டமாக தீபாவளி பொங்கலை குறி வைக்கிறார். இந்த இந்த மாதிரி விழாக்கள் நேரத்தில் படங்களை ரிலீஸ் செய்தால் நமக்கும் ஒரு மாஸ் ஓப்பனிங் கிடைக்கும். நம்ம ரேஞ்ச் என்ன என்பது எல்லோருக்கும் தெரியவரும் என சிவகார்த்திகேயன் யோசித்து செயல்பட்டு வருகிறார்.

அதற்கேற்றாற்போல் இப்பொழுது தல அஜித் நடித்துக் கொண்டிருக்கும் AK 61 படம் பின்வாங்கியதால் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் தீபாவளி வரவிருக்கிறது. அதனால் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு செம லக் அடித்துவிட்டது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான டாக்டர், டான் படத்தின் மூலம் 100 கோடி வசூலை குவித்து சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்திருக்கும் நிலையில், தீபாவளிக்கு ரிலீஸாகும் அவருடைய பிரின்ஸ் படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றிக்கு வழி வகுத்திருக்கிறார்.

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியிருக்கும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் கைடாக நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடிக்கிறார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அக்டோபர் மாதம் தீபாவளிக்கு ரிலீஸாகும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கு போட்டியாக கார்த்தியின் சர்தார் படமும் ரிலீஸாகிறது. இதைப் போன்று இனிவரும் நாட்களில் தீபாவளிக்கு என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகும் என்பதால் கடும் போட்டிக்கு மத்தியில் சிவகார்த்திகேயன் தன்னுடைய ரேஞ்ச் என்ன என்பதை காட்ட போகிறார்.