நயன்தாராவின் திருமணத்திற்கு வராத பல பிரபலங்கள்.. இவங்க மேல நம்பிக்கை வைத்ததற்கு சும்மா இருந்திருக்கலாம்

நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகர்கள் பலரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மகாபலிபுரத்தில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது

இவர்களின் திருமணத்திற்காக பலரையும் திருமண பத்திரிக்கை வைத்து அழைத்திருந்த நிலையில் ரஜினிகாந்த், சூர்யா,சரத்குமார், அட்லீ, ஷாருகான், திலீப்குமார் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் கலந்துகொண்டனர். மேலும் திருமணத்திற்கு வந்த அனைத்து பிரபலங்களுக்கும் தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை நயன்தாரா, விக்னேஷ்சிவன் சார்பாக பரிசாக வழங்கப்பட்டது.

இதனிடையே மு க ஸ்டாலின் மற்றும் உதயாநிதி ஸ்டாலின் இருவரையும் நேரில் சந்தித்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் இருவரும் திருமணத்திற்கு வராமல் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி மட்டும் திருமணத்தில் கலந்துகொண்டார்.

மேலும் நயன்தாராவுடன் வில்லு, பீகில் உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த தளபதி விஜய், ஏகன், பில்லா, விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்த அஜித் உள்ளிட்டோர் நயன்தாராவின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைத்தும் குடுமபத்தாரை மட்டும் அனுப்பி வைத்தனர்.

மேலும் நயன்தாராவுடன் சத்யன் திரைப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த விஷால், ராஜா ராணி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ஆர்யா, ஜெய் உள்ளிட்டோர் நயன்தாராவின் திருமணத்தில் கலந்துக் கொள்ளவில்லை. மேலும் நயன்தாராவின் நெருங்கிய தோழியும், நடிகையுமான சமந்தா திருமணத்திற்கு கலந்து கொள்ளாமல் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

பல கோடி ரூபாய் பொருட்செலவில் திருமணம் நடைப்பெற்ற நிலையில், பல திரைப்பட பிரபலங்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு பத்திரிகை வைத்தும் நயன்தாரா,விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு இத்தனை பேர் கலந்து கொள்ளாமல் இருந்தது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.