நயன்தாராவுக்கு அடிமையாக இருந்தது போதும்.. வேற வேலையை பார்க்க சென்ற விக்னேஷ் சிவன்

பல வருடங்களாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி தற்போது திருமணத்தில் இணைந்துள்ளனர். தற்போது திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் இந்த வளர்ச்சிக்கு ஒரு விதத்தில் விக்னேஷ் சிவனும் காரணமாக இருந்துள்ளார்.

அவர் நயன்தாராவின் வாழ்க்கைக்குள் வந்த பிறகு அவருடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. மேலும் விக்னேஷ் சிவன் என்னை அதிகமாக பூஸ்ட் அப் செய்வார். ஒரு பெண் என்னென்ன சாதிக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு எனக்கான சுதந்திரத்தை அவர் கொடுத்தார். இதுதான் எங்களுக்குள் காதல் மலர காரணமாக இருந்தது என்று நயன்தாரா பலமுறை கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் நயன்தாராவை ஒருவர் சந்திக்க வேண்டும் என்றால் விக்னேஷ் சிவனிடம் தான் அனுமதி பெற வேண்டும். அவர் சொல்லும் கதையில்தான் நயன்தாரா நடித்து வந்தார். சமீப காலமாக விக்னேஷ் சிவன் ரொம்பவும் மாறிவிட்டாராம்.

நயன்தாரா தற்போது பாலிவுட் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதேபோன்று விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதில் பிஸியாக இருக்கிறார். இதனால் தற்போது இவர்கள் இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

அது மட்டுமல்லாமல் நயன்தாரா தன்னுடைய பட வேலைகள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் அவரே தான் கவனித்து வருகிறாராம். விக்னேஷ் சிவன் தற்போது பெரிய நடிகரை வைத்து படம் இயக்குவதால் நயன்தாராவிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவி வருகிறாராம். அதிக வேலை இருப்பதால் இனிமையும் அடிமையாக  இருக்க முடியாது என்பதுதான் விக்னேஷ் சிவனின் முடிவாம்.

மேலும் நயன்தாரா எது கூறினாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று அப்படியே டீலில் விட்டு விடுகிறாராம். இதுவரை நயன்தாரா சொல்வது எல்லாம் அப்படியே கேட்டு வந்த விக்கி இப்போது அவருக்கு ஏகப்பட்ட கண்டிஷன் போட்டு வருவதாக ஒரு தகவல் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.