நயன்தாராவை செலக்ட் பண்ணது ரொம்ப தப்பா போச்சு.. கவலையில் இருக்கும் O2 படக்குழு

நயன்தாரா தற்போது வேற லெவலில் ஃபார்ம் ஆகியுள்ளார். கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் நயன்தாரா உள்ளார். மேலும் தற்போது பாலிவுட்டிலும் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். அதுவும் முதல்படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

சமீபத்தில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் O2. இப்படத்தில் நயன்தாரா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்தார். அதாவது நயன்தாரா, நுரையீரல் குறைபாடு உள்ள குழந்தையை ஆக்சிஜன் சிலிண்டர் உடன் அழைத்துக்கொண்டு பஸ்ஸில் பயணிக்கிறார்.

எதிர்பாராத விதமாக பஸ் மண்ணுக்குள் புதைந்து விடுகிறது. மேலும் அந்த பஸ்ஸில் போதை பொருள் கடத்தும் கும்பலும் உள்ளது. அதில் இருந்து நயன்தாரா தனது மகனை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை. ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி இந்த கதை இருந்தாலும் சுவாரஸ்யம் சற்றுக் குறைவாகவே இருந்ததாக விமர்சனங்கள் வந்தது.

அதாவது இப்படத்தில் பஸ் மண்ணுக்குள் புதையும் போது கண்ணாடி உடைந்த நயன்தாரா மீது மண் படுவது போன்ற காட்சி எடுக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார். ஆனால் நயன்தாரா என் மீது மண்ணெல்லாம் படக்கூடாது என கூறிவிட்டாராம். மேலும் ஒரு சில கண்டிஷன் போட்டி இருந்தாராம்.

இதனால் இயக்குனர் நினைத்தபடி இதில் சில காட்சிகள் எடுக்க முடியவில்லையாம். கோலிவுட்டில் அதிக ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார் நயன்தாரா என்பதால் இப்படத்தில் ஒப்பந்தம் செய்தனர். ஆனால் தற்போது நயன்தாராவால் தான் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என படக்குழு அப்செட்டில் உள்ளார்களாம்.

மேலும் நயன்தாராவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகையை வைத்து எடுத்திருந்தாலும் படம் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும் என படக்குழு யோசித்து வருகிறார்களாம். மேலும் தற்போது நயன்தாராவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வருவதாலும், பாலிவுட் பக்கம் சென்றதாலும் இவ்வாறு படங்களில் கண்டிஷன் போட்டு வருகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

The post நயன்தாராவை செலக்ட் பண்ணது ரொம்ப தப்பா போச்சு.. கவலையில் இருக்கும் O2 படக்குழு appeared first on Cinemapettai.