நயன், விக்கி முழு சொத்து மதிப்பு.. இருந்தாலும் சமந்தா தான் நம்பர் ஒன்

கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் உள்ளவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடமாக காதலித்து வந்த நயன்தாரா தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திரைத் துறையைச் சார்ந்த பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். ஷாருக்கான், ரஜினிகாந்த் போன்ற நட்சத்திரங்கள் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. நயன்தாரா ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 3 கோடியில் இருந்த 5 கோடி வரை பெற்று வருகிறார். நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 71 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் வசூல் ரீதியாக லாபத்தை பெற்றது. இதை தொடர்ந்து அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

விக்னேஷ் சிவன் ஒரு படத்திற்கு 3 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார். அவருடைய முழு சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 50 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பை விட சமந்தாவின் சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது.

அதாவது சமந்தாவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 84 கோடி இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது வரை இவர்கள் இருவரும் நட்பாக பழகி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.