நாங்கள் சமுதாயத்தை அழிக்கும் அரக்கர்களா.. கோபத்தில் கொந்தளித்த ஷாருக்கான்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். இதனால் சமீபத்தில் சென்னையில் மகாபலிபுரத்தில் நடந்த நயன்தாராவின் திருமணத்தில் ஷாருக்கான் பங்கேற்றார்.

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிக்கி இருந்தார். மும்பையில் சொகுசு கப்பலில் போதை பார்ட்டியில் ஈடுபட்டதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த செய்தி இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் ஷாருக்கான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார். படப்பிடிப்பிலும் அவரால் கலந்து கொள்ள முடியாமல் போனது. அதன்பின்பு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஆர்யனுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனாலும் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் ஆரியனுக்கு தொடர்பு இருப்பதாக ஒரு வழக்கை தயாரித்திருந்தனர்.

ஆனால் ஆரியன் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அதாவது ஆரியன் கான் போதை பொருள் வைத்திருந்ததாகவும், பயன்படுத்தியதாகவும் எந்த ஆதாரங்களையும் அதிகாரிகள் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஷாருக்கான் தனது மகனைப் பற்றி பேசியதை சஞ்சய் சிங் கூறியுள்ளார். அதாவது ஆரியன் சிறையில் இரவு நேரங்களில் சரியாக தூங்க மாட்டார் என சொன்னதாக கூறியுள்ளார். இதனால் ஆர்யனுடன் ஷாருக்கான் இரவு நேரத்தில் தங்கியதாகவும் என் மகன் மீது எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் குற்றம்சாட்டி இழிவுபடுத்தியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தாங்கள் ஏதோ கிரிமினல்கள் போலவும் இந்த சமுதாயத்தை அழிக்க துடிக்கும் அரக்கர்கள் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளோம் என கண்ணீர் மல்க ஷாருக்கான் கூறியுள்ளார். ஒரு தந்தையாக தன் மகன் குற்றமற்றவன் என நிரூபிக்க ஷாருக்கான் போராடி வருகிறார்.

The post நாங்கள் சமுதாயத்தை அழிக்கும் அரக்கர்களா.. கோபத்தில் கொந்தளித்த ஷாருக்கான் appeared first on Cinemapettai.