நான் ஒன்னும் அவ்ளோ பெரிய உத்தமி எல்லாம் கிடையாது.. வெளிப்படையாகப் பேசிய விக்ரம் பட நடிகை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியிருக்கும் விக்ரம் படம் உலக அளவில் 375 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. விக்ரம் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்றவாறு சரியான முக்கியத்துவத்தை கொடுத்துள்ளார் லோகேஷ்.

விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா அனைவரும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தி இருந்தனர். அதேபோல் விஜய்சேதுபதிக்கு மனைவியாக விஜய் டிவி நடிகைகள் மைனா நந்தினி, மகேஸ்வரி, ஷிவானி நாராயணன் ஆகியோர் நடித்திருந்தனர். அதேபோல் காளிதாஸ் ஜெயராமும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இவர்களை எல்லாம் தாண்டி இரண்டு கதாபாத்திரம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அதாவது ஏஜென்ட் டீனா மற்றும் மாயா கதாபாத்திரம். அதிலும் மாயாவை இளைஞர்கள் கொண்டாடி வருகின்றர். விக்ரம் படத்தில் மாயா விபச்சாரியாக நடித்திருப்பார்.

மேலும், மாயாவின் குரலுக்கு ஏற்ப அனிருத்தின் பின்னணி இசையும் ரசிகர்களை சுண்டி இழுத்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்த மாயா கிருஷ்ணன் பேசியிருந்தார். அதாவது லோகேஷ் கனகராஜ் இந்த கதாபாத்திரத்தில் கொஞ்சம் எதார்த்தமாக நடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதற்கு மாயா, என்னுடைய சுபாவமே எல்லாவற்றையும் எதார்த்தமாக எடுத்துக் கொள்வதுதான். மேலும், நான் ஒன்றும் மிகப்பெரிய உத்தமி எல்லாம் கிடையாது. சூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்து இருக்கிறார்களோ அதற்கு உண்மையாக இருந்த நடித்துக் கொடுத்தேன் என கூறியுள்ளார்.

மாயா இவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் ஒருபக்கம் இப்படி பேசுகிறாரே என சிலர் திட்டி தீர்த்த வருகின்றனர். ஆனாலும் விக்ரம் படம் மாயாவுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்திருந்தது. இதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர அதிக வாய்ப்புள்ளது.