பக்காவாக பிளான் போட்ட கமல்ஹாசன்.. ஷங்கர் படத்திற்கு வந்த புதிய பிரச்சனை

உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தையடுத்து, தற்போது பல திரைப்படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.இதனிடையே கூடிய விரைவில் தேவர் மகன் 2 திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசன்,விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம், திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ஓடி வசூல் சாதனை படைத்து வருகிறது. இதனிடையே இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மேலும் பல படங்களில் கமலஹாசன் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

இதனிடையே இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாக உள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது. இரண்டு வருடங்களாக இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் தேவர்மகன் 2 திரைப்படத்தில் கமலஹாசன் நடிப்பார் என உறுதி செய்யப்பட்டது. இதனிடையே இத்திரைப்படம் இந்தியன் 2 விற்கு முன்பாகவே ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது. மேலும் கமலஹாசன் தேவர்மகன் 2 கதை எழுதும் நிலையில், நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாகவும், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

1992 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன்,கமலஹாசன்,ரேவதி உள்ளிட்டோர் நடித்த தேவர்மகன் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதே போல இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமலஹாசன், மனிஷா கொய்ரால, சுகன்யா, கவுண்டமணி உள்ளிட்டோர் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு இந்தியன் திரைப்படம் வெளியாகி பிரமாண்டமான வெற்றியை கொடுத்தது.

இதனிடையே முதலில் வெளியான தேவர்மகன் திரைப்படத்தின் பாகம் இரண்டின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை, இந்த வருடம் கடைசியில் அல்லது அடுத்த வருடம் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் பல பிரச்சனைகளில் இருந்து வரும் நிலையில், இந்தியன் 2 திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அதற்கும் கமலஹாசன் முட்டுக்கட்டை போட்டுவிட்டதால் ஷங்கரின் நிலை அதோகதியாகி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.