படத்தில் கல்லா கட்ட முடியாமல் ரூட்டை மாற்றிய ஜீவா.. இதுலயாவது நல்ல நேரம் வரட்டும்

3;

நடிகர் ஜீவாவுக்கு சமீப காலமாக நேரமே சரியில்லை. அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால் பல தயாரிப்பாளர்களும் அவரை வைத்து படம் எடுப்பதற்கு தயங்கி வருகிறார்கள். கடைசியாக அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வந்த வேகத்திலேயே தியேட்டரை விட்டு சென்றது.

இப்படி ஒரு சூழ்நிலையில் இருக்கும் ஜீவா தற்போது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம். ஜீவாவுக்கு ஆரம்பத்தில் அடுத்தடுத்த திரைப்படங்கள் கிடைத்தது. அதிலும் பிரபல தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியின் மகனான இவர் தன் தந்தையின் தயாரிப்பில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Also read:சம்பளமே இல்லாமல் நடிக்க ரெடி.. விஜய்க்காக விட்டுக் கொடுத்த பிரபலம்

தற்போது அவருக்கு வாய்ப்புகள் எதுவும் இல்லாத படியால் ஜீவா புது முயற்சி ஒன்றை எடுத்துள்ளார். அதாவது தன் அப்பாவை போலவே ஜீவாவும் சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளாராம். சூப்பர் பாக்ஸ் என்ற பெயரில் அவர் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

அதன் மூலம் இளம் இயக்குனர்கள் மற்றும் புதுமுக இயக்குனர்களுக்கு அவர் வாய்ப்பு கொடுக்க இருக்கிறாராம். நல்ல கதை மற்றும் திறமையான இயக்குனர்களுக்கு அவர் முன்னுரிமை கொடுக்க இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தன் சொந்த தயாரிப்பிலேயே அவர் நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.

Also read:9 வருடங்களுக்குப் பிறகு இணையும் கூட்டணி.. விஜய்க்காக தயாராகும் 100வது படத்தின் கதை

இதன் மூலம் நிச்சயம் அவர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்று திட்டம் போட்டுள்ளார். தற்போது வளர்ந்து வரும் பல நடிகர்கள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஜீவாவும் இப்படி ஒரு முயற்சியில் இறங்கியுள்ளார்.

மேலும் மல்டி ஸ்டார் திரைப்படங்களில் நடிக்கவும் அவர் ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கிறாராம். கூடிய விரைவில் அவரின் புது பட அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாவது அவருக்கு ஒரு நல்ல நேரம் வரட்டும் என்று திரையுலகில் பேசி வருகின்றனர்.

Also read:பட வாய்ப்பு இல்லாததால் புது ரூட்டை பிடித்த ஜீவா.. அர்ஜுனுக்குகே டஃப் கொடுப்பார் போல!