பட வாய்ப்பிற்காக மட்டமான வேலை பார்த்த லாஸ்லியா.. ஆரம்பித்த இடத்துக்கே சென்ற பரிதாபம்

இலங்கையில் பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். அதிக அளவில் பிரபலம் இல்லாத நபர் கூட இந்த நிகழ்ச்சியின் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமாகி விட முடியும்.

அதை நன்றாக தெரிந்து கொண்ட லாஸ்லியா பல தடைகளை தாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் எதிர்பார்த்தது போலவே அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி இவரால் எகிறியது. கொஞ்சும் தமிழ் பேசி, மெழுகு பொம்மை போன்று இருக்கும் இவரை தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது.

இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான நடிகர் கவினுடன் இவர் நெருக்கமாக பழகியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாக வலம் வந்த இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் எழுந்தது.

ஆனால் அவை அனைத்தும் டிராமா என்று பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தான் தெரிந்தது. கவின் உண்மையாக காதலித்த போதும் லாஸ்லியா அவரை பட வாய்ப்புக்காக பயன்படுத்திக் கொண்டார் என்ற ஒரு பேச்சும் எழுந்தது. இதனால் ரசிகர்கள் அவரை ஒட்டுமொத்தமாக வெறுக்க தொடங்கினர்.

ஆனாலும் லாஸ்லியாவின் பிளான் படி அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. இதனால் அவரும் தன் உடல் எடையை குறைத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் அவருக்கு தற்போது வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லையாம்.

ஏனென்றால் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் அவருக்கு நடிப்பு வராது என்பதை புரிந்து கொண்ட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தற்போது அவரை வேண்டாம் என்று ஒதுக்குகிறார்களாம். இதனால் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கும் லாஸ்லியா போட்ட பிளான் எல்லாம் சொதப்பியதை நினைத்து வருத்தத்தில் இருக்கிறாராம்.

மேலும் இனிமேல் கோலிவுட்டில் தாக்கு பிடிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்ட அவர் இப்போது சொந்த நாட்டிற்கே திரும்பி விடும் முடிவில் இருக்கிறாராம். நினைச்சது ஒன்னு ஆனா நடந்தது ஒன்னு என்று புலம்பியபடி இருக்கும் லாஸ்லியாவை பற்றி தான் தற்போது கோலிவுட்டில் பேச்சாக கிடைக்கிறது.