பண மோசடியில் சிக்கிய அசுரன் பட அம்மு அபிராமி.. இப்படி எல்லாமா பிராடு பண்ணுவாங்க!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அசுரன் படத்தின் மூலம் பிரபலமான அம்மு அபிராமி பண மோசடியில் சிக்கி உள்ளார்.

சமீபகாலமாக நூதன முறையில் பல பண மோசடி நடந்து வருகிறது. அதுவும் தொழில் நுட்ப வளர்ச்சி ஒரு பக்கம் நன்மையை தந்தாலும் மறுபுறம் தீமைகளுக்கும் வழி வகுத்து வருகிறது. அதுவும் துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திலிருந்து நவீன திருட்டை காண்பித்து இருப்பார்கள்.

அவ்வாறு இப்போது ஒரு மோசடியில் சிக்கி உள்ளார் அசுரன் பட நடிகை அம்மு அபிராமி. விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்தின் மூலம் அறிமுகமான இவர் ராட்சசன், அசுரன், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Also Read : அம்மு அபிராமி ஜோடியாகும் குக் வித் கோமாளி பிரபலம்.. விஜய் டிவி இல்லைனா இவங்க ரெண்டு பேரும் இல்ல

இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தது மட்டுமின்றி பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில் அம்மு அபிராமி பல பிரபலங்கள் போல யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இவரின் யூடியூப் சேனல் போலவே மர்ம ஆசாமி ஒருவர் போலி கணக்கை தொடங்கியுள்ளார்.

இதில் அம்மு அபிராமியின் ரசிகர் ஒருவரிடம் உங்களுக்கு பரிசு அனுப்புவதாக சொல்லி 5000 ரூபாய் டெலிவரி சார்ஜ் கேட்டுள்ளார். அந்த ரசிகரும் அம்மு அபிராமி தான் கேட்கிறார் என பணத்தை அனுப்பி விட்டார். இப்போது தான் அவர் ஏமாந்து உள்ளார் என்ற விஷயம் தெரியவந்துள்ளது.

Also Read : படுமோசமான கவர்ச்சி காட்டிய அசுரன் அம்மு அபிராமி.. இணையத்தையே ஆட்டிப்படைக்கும் புகைப்படம்!

இதை அறிந்த அம்மு அபிராமி இப்படி எல்லாம் பிராடு பண்ணுவீங்களா என்று கோபமாக பேசி ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் எனது பெயரை சொல்லி மோசடி செய்ததை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். இவ்வாறு அடுத்தவரின் காசை திருடும் அளவிற்கு கேவலமான செயலை யாரும் செய்யாதீர்கள்.

நான் இதுவரை யாருக்கும் பரிசு பொருட்கள் எதுவும் அனுப்பவில்லை. இனியும் யாரும் இது போல் ஏமாறாமல் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அம்மு அபிராமி கேட்டுக் கொண்டுள்ளார். இப்போது கோடம்பாக்கத்தில் இந்த விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

Also Read : மூக்குத்தி அம்மனாக மாற அபிராமி செய்த செயல்.. இதுலாம் ஓவரா நக்கலா இல்லையா.?