பயத்தில் குழம்பிப் போயிருக்கும் லோகேஷ் கனகராஜ்.. வெற்றி கொடுத்தாலும் பயம் வருதப்பா!

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்து பாக்ஸ் ஆபீஸில் 400 கோடிக்கு மேல் வசூல் ஆகியுள்ளது. விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.

விக்ரம் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். தற்போது இப்படத்தை இயக்குவதற்கு லோகேஷ் கனகராஜ் சற்று பயந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால், லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படமான தளபதி 67 படத்தை விக்ரம் படத்தை விட ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டுமென நினைத்துள்ளார். காரணம் ரசிகர்கள் விக்ரம் படத்தை விட அதிக அளவு எதிர்பார்ப்பார்கள்.

அந்த அளவிற்கு படத்தில் கதையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனை விஜயிடம் தெரிவித்துள்ளார் விஜய்யும் சம்மதம் தெரிவிக்க தற்போது முழுவீச்சில் கதையில் மாற்றங்கள் செய்து வருகிறார்.

ஆனால் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் லோகேஷ் கனகராஜ் இவ்வளவு பெரிய வெற்றி கொடுத்தாலும் பயந்து இருக்கிறாரே என கூறிவருகின்றனர். பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் பயபக்தியோடு செய்தால் நிச்சயம் அந்த விஷயம் நல்லபடியாக அமையும்.

அப்படிதான் தளபதி விஜய்யை வைத்து, அவருடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ய போகிறார். இவருடைய இந்த எண்ணத்தால் படம் பிரமாதமாக வரும் என ரசிகர்கள் கணித்திருக்கின்றனர்.