பலரை கேலி கிண்டல் செய்து வாயடைத்துப் போன உதயநிதி.. படு தோல்விக்குப் பின், இப்ப என்ன செய்யப் போறாரு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எந்த படம் ரிலீஸ் ஆனாலும் உடனே வெளிப்படையாக கமெண்ட் செய்து கிண்டல் செய்யும் உதயநிதி. தனக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வியையும் வெளிப்படையாக சொல்லுவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

நடிகர், அரசியல்வாதி, தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட உதயநிதி ஸ்டாலின் தற்போது பல திரைப்படங்களை தனது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக திரையரங்குகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

மேலும் உதயநிதி வெளியிடும் படங்களுக்கு தமிழகத்தில் அதிக திரையரங்குகளும் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் கலகத்தலைவன். இந்த படம் தற்போது மோசமான வசூலை பெற்றுள்ளது.

Also Read: ரிலீஸ் ஆன மறுநாளே உதயநிதி தலையில் இடியை இறக்கிய சம்பவம்.. கலகத்தலைவன் வசூலில் ஏற்பட்ட சிக்கல்

இதுவரை ஒரு கோடி மட்டுமே தமிழகத்தில் வசூல் செய்திருக்கிறது. இது ரொம்ப மோசமான வசூலாக கருதப்படுகிறது. ஆனால் இவர் வாங்கி வெளியிடும் படங்கள் அனைத்தும் தற்போது வெற்றி அடைந்து கொண்டிருக்கிறது. ஆனால் இவர் படம் மோசமான தோல்வியை சந்தித்தது அதிர்ச்சியாக இருக்கிறது.

உதயநிதியின் கலகத்தலைவன் படத்தின் பிரீமியர் ஷோவில் முக ஸ்டாலின் படத்தைப் பார்த்து நன்றாக நடித்து இருக்கிறார் உதயநிதி என்று குறிப்பிட்டு சென்றிருந்தார். அதேபோல் உதயநிதி கொஞ்சம் ஓபனாக பேசக்கூடியவர். இதற்கு அவருக்கு இதற்கு என்ன காரணம் என்றால் அவருக்கு சினிமாவிலும் அரசியலிலும் நல்ல செல்வாக்கு இருப்பது தான்.

Also Read: இதுதான் சொந்த செலவுல சூனியம் வைக்கிறதா.? கல்லா கட்ட முடியாமல் தவிக்கும் உதயநிதி

இப்படி அனைத்து படங்களையும் கமெண்ட் பண்ணும் உதயநிதி. தன்னுடைய படத்தையும் வெளிப்படையாக பேசியது படம் ஓடாததற்கும் ஒரு காரணம் என்று படக்குழு நினைக்கிறது. இந்த படத்தில் உதயநிதி உடன் பிக் பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோரும் இணைந்து நடித்திருப்பதால் அவர்களுக்கும் இந்த படத்திற்குப் பிறகு நல்ல சினிமா கேரியர் இருக்கும் என்று நம்பினார்கள்.

இவ்வாறு கலகத் தலைவர் படத்திற்கு மோசமான வசூல் கிடைத்திருப்பது படக் குழுவை அதிர்ச்சடையை வைத்ததுடன், இதற்கு முழு காரணம் உதயநிதி தான் என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும் அவர் அடிக்கடி சொல்கிற மாதிரி அரசியலில் முழு நேரமும் ஈடுபட்ட செல்லலாம் என்றும் சிலருக்கு தோன்றுகிறது.

Also Read: விநியோகஸ்தர்களால் அசிங்கப்படும் உதயநிதி.. எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஒதுக்கும் கும்பல்