பழைய படங்களை பட்டி டிங்கரிங் செய்யும் நடிகர்கள்.. ஆனால் சிம்பு வேற லெவல்

ஒரு சில வருடங்களாக பழைய படங்களுக்கான மோகம் இப்பொழுது மக்களுக்கு புரிய தொடங்கியுள்ளது. அதன் விளைவாக பழைய படங்களை தூசு தட்டி டிஜிட்டல் என்ற பெயரில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கின்றது. எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்கள் படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

அதற்கு அடுத்ததாக தற்போது 10 மற்றும் 15 வருடங்களுக்குள் வெளியான தமிழ் திரைப்படங்கள் நல்ல தரத்துடன் சில படங்களை 3D படங்கள் உருமாற்றி மக்களுக்கு கொடுத்து வந்தனர். ஓரளவு வெற்றியும் பெற்றனர், அதில் ரஜினி நடித்த எந்திரன் படம் 3D படமாக மாற்றப்பட்டு வெளியிட்டனர்.

தற்போது 2002 இல் வெளியான துள்ளுவதோ இளமை படம் ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. அடுத்ததாக கமல் நடிப்பில் வெளியான ஆளவந்தான் திரைப்படம் தற்போது 3டியில் வெளியாக உள்ளது. அதற்கான அறிவிப்பு வெளியிட்டனர். இன்னும் முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கின்றன.

கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு கூட்டணியில் 2010ல் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸ் ஆக சென்னையிலுள்ள PVR திரையரங்கில் 126 நாட்கள் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது யாருக்கும் தெரியாததால் ஆச்சரியமாக உள்ளது இத்தனை நாட்கள் ஓடியது.

மேலும் படத்தை 150 நாட்களுக்கு மேல் ஓட வைக்க வேண்டும் என்பதற்காக நாளுக்கு ஒரு காட்சி மட்டுமே ஒளிபரப்ப பட்டுள்ளன. காரணம் மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படம்வெளியாக உள்ளது இவர் மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கில் ஒளிபரப்பு செய்து வருவதாக கூறி வருகின்றனர்.

நல்ல திரைப்படங்களுக்கு வரவேற்பு இருக்கும் என்பதில் இந்த படங்கள் உதாரணம். இதன் விளைவாக பழைய படங்களினால் அந்தப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இந்த காலத்தில் சம்பாதிப்பது எளிதாக அமைந்துள்ளது. இது பல படங்கள் வருவதற்கு உற்சாகமாக அமைகிறது.