பாரதியால் குடிக்கு அடிமையான வெண்பா.. அதிரடியான ட்விஸ்ட்டில் பாரதிகண்ணம்மா!

விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. அதாவது வெண்பாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாரதியின் குடும்பம் அவரின் திருமண வேலைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வாரம் ரோகித் மற்றும் வெண்பாவுக்கு விமரிசையாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதை நிறுத்துவதற்காக வெண்பா எவ்வளவு திட்டம் போட்டும் அதை சௌந்தர்யா முறியடித்து ஒருவழியாக திருமண நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டார்.

Also read: கண்ணம்மா சோலி முடிந்தது.. பாரதியுடன் திருமணக்கோலத்தில் வெண்பா அடிக்கும் லூட்டி

இதனால் கடுப்பான வெண்பா தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் சரக்கு பாட்டிலுடன் புலம்பிய படி இருக்கிறார். இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் கடுப்புடன் இருக்கும் வெண்பாவிடம் பாரதி மிகவும் சந்தோஷமாக பேசுகிறார்.

இதனால் மேலும் கோபமடையும் வெண்பா எனக்கு வாழ்த்து சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்கிறார். அதற்கு பாரதி நான் உன்னை எப்பொழுதும் தோழியாக மட்டும்தான் பார்க்கிறேன் என்று பதிலளிக்கிறார். அதனால் காண்டான வெண்பா குடித்துவிட்டு பயங்கர அலப்பறை கொடுக்கிறார்.

Also read: பாரதியை காப்பாற்ற முட்டாள்தனமான முடிவெடுத்த சௌந்தர்யா.. ஜோலியை முடிச்சுவிட்ட கண்ணம்மா!

அப்போது அங்கு வரும் ரோஹித் வெண்பாவை பார்த்து யார் அதிகமாக குடிக்கிறார்கள் என்று போட்டி வைத்து கொள்ளலாமா எனக் கேட்கிறார். அதன் பிறகு இருவரும் போட்டி போட்டுக் கொண்டு குடித்து மட்டையாவது போல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இதுபோன்ற காட்சிகள் தான் இனி வரும் நாட்களில் ரசிகர்களுக்கு காட்டப்பட இருக்கிறது. மேலும் இந்த ஒரு விஷயத்தை வைத்தே ரோஹித் திருமணத்தை விரைவில் முடிப்பார் என்றும் யூகிக்கப்படுகிறது. அந்த வகையில் வரும் வாரங்களில் திருமண கொண்டாட்டமும், அதனால் வெண்பாவின் திண்டாட்டமும் சீரியலை சுவாரஸ்யமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: கட்டிப்பிடித்து எலும்பை உடைத்த சௌந்தர்யா.. மரண பீதியில் வெண்பா

The post பாரதியால் குடிக்கு அடிமையான வெண்பா.. அதிரடியான ட்விஸ்ட்டில் பாரதிகண்ணம்மா! appeared first on Cinemapettai.