புஷ்பா புருஷனான கோபி.. பதறியடித்துக்கொண்டு கல்யாணத்தை நிறுத்த வந்த வாரிசு

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி-ராதிகா திருமணம் இன்று நடக்கப் போகிறது. ஏற்கனவே இவர்களது திருமணத்தை நிறுத்த கோபியின் அப்பா முயற்சித்தபோது, அவரால் அதை செய்ய முடியவில்லை.

தற்போது கோபியின் அப்பா குடும்பத்தினரிடம் இந்த விஷயத்தை எல்லாம் தெரிவித்ததால் கேட்டதும் பதறிப்போன கோபியின் அம்மா ஈஸ்வரி மற்றும் மகள் இனியா மற்றும் மருமகள் ஜெனி மூவரும் ஆட்டோவில் பதறியடித்துக்கொண்டு மண்டபத்திற்கு வருகின்றனர்.

Also Read: 50 வயதில் ஹனிமூன் சென்ற கோபி.. பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த எதிர்பாராத ட்விஸ்ட்

மகளிடம் மட்டும் நல்லவன் போல் வேஷம் போடும் கோபி, ராதிகாவின் கழுத்தில் தாலி கட்டப் பார்ப்பதால் அந்த சமயம் இனியாவை எப்படி சமாளிப்பார் என்பதைப் பார்ப்பதற்காகவே சின்னத்திரை ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் வரும்போது ஐயர் மந்திரத்தை ஓதி, கோபியின் கையில் தாலியை கொடுத்து கட்ட சொல்கிறார்.

இனியா வருவதற்கு முன்பே கோபி, ராதிகாவை தன்னுடைய மனைவியாக்கிக் கொள்கிறார். இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இனியா மற்றும் ஈஸ்வரி இருவரும் அந்த இடத்திலேயே நிலைகுலைந்து போகின்றனர். அதுமட்டுமின்றி ராதிகாவை திருமணம் செய்து கொண்ட பிறகு, கோபிக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று குடும்பமே கோபியை கைகழுவ போகிறது.

Also Read: பாக்கியாவிற்காக பரபரப்பை கிளப்பும் மகா சங்கமம்.. இனி கோபி,ராதிகா கதி அதோகதிதான்

இதற்கெல்லாம் கவலைப்படாத கோபி அடுத்ததாக ராதிகாவுடன் ஹனிமூன் செய்வதற்கு ப்ளான் போடுகிறார். இதற்கிடையில் பாக்யாதான் பாவப்பட்ட ஜென்மம் ஆக மாறிவிடுகிறார். தன்னுடைய கணவரின் கல்யாணத்திற்காக சமைத்துக் கொடுக்கும் துரதிஷ்டவாளியாக இருக்கிறார்.

எனவே பாக்யாவுக்கு சப்போர்ட்டாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பாக்கியலட்சுமி சீரியலுடன் இணைந்து, அடுத்த வாரம் முழுவதும் மகா சங்கமத்தில் புஷ்பா புருஷனான கோபியை கதிரடிக்கும் போகின்றனர்.

Also Read: ஆட்டம் கண்ட டாப் சீரியல்.. டிஆர்பியால் விஜய் டிவி எடுத்த அதிரடி