பேராசையில் லோகேஷ்.. கமல் அளவுக்கு தாக்கு பிடிப்பாரா சூப்பர் ஸ்டார்!

விக்ரம் திரைப்படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் தற்போது ரசிகர்கள் கொண்டாடும் இயக்குநராக மாறியிருக்கிறார். கமல்ஹாசன் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த விக்ரம் திரைப்படம் தியேட்டர்களில் தற்போது வரை ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இப்போது படக்குழுவினர் அனைவரும் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். அதிலும் இயக்குனருக்கு எல்லா இடத்திலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ், விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்க இருக்கிறார்.

இந்தப் படம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் ஒரு பேட்டியில் லோகேஷிடம் சூப்பர் ஸ்டார் திரைப்படத்தை இயக்குவீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. ஏனென்றால் சமீபகாலமாக லோகேஷ் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்க போவதாக ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.

தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்து இருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில் லோகேஷ் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை இல்லை பேராசை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், சிறுவயதில் இருந்தே நாம் பார்த்து வியந்த நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் நான் விக்ரம் திரைப்படத்திற்கு நேர்மையாக உழைத்ததை போன்று அந்தப் படத்திற்கும் நேர்மையாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் அவர்களின் கூட்டணி விரைவில் உருவாகும் என்று தெரிகிறது. மேலும் ஒரு சில ரசிகர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தாலும், ஒருசிலர் கமல் அளவுக்கு ரஜினி தாக்குப்பிடிப்பாரா என்ற ஒரு கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் விக்ரம் திரைப்படத்தில் கமல் பல சண்டை காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்து இருந்தார். அந்த அளவுக்கு சூப்பர் ஸ்டார் இறங்கி ரிஸ்க் எடுத்து நடிப்பாரா என்பது பலருக்கும் சந்தேகமாக இருக்கிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.