பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருந்த பிரபலங்கள்.. இந்த கூட்டணி நல்லாத்தான் இருக்கு

கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் படத்தை இயக்க பல பெரிய இயக்குனர்கள் முயற்சி செய்திருந்தனர். ஒரு சில காரணங்களால் அது தடைப்பட்டு போய்க்கொண்டே இருந்தது. ஒருவழியாக தற்போது மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை பல பிரபலங்களை வைத்து இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, த்ரிஷா, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரபு எனப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை வேறு நடிகர்களை வைத்து இயக்க ஆரம்பத்தில் மணிரத்னம் முடிவு செய்திருந்தார்.

அதாவது விஜய் நடிப்பில் வெளியான நேருக்குநேர் படத்தை மணிரத்னம் தயாரித்து இருந்தார். அதன்பிறகு மணிரத்னம் தனது கனவு படத்தை விஜய்யை வைத்து எடுக்கலாம் என நினைத்திருந்தார். அதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

மேலும் பல முக்கியமான கதாபாத்திரத்தில் சூர்யா, விஷால், அனுஷ்கா, ஆர்யா, சத்யராஜ், பிரியங்கா சோப்ரா, அசின் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது. ஆனால் அதற்குள் பணப்பிரச்சனை மற்றும் படப்பிடிப்பு தளங்களில் அனுமதி மறுப்பு காரணமாக இந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

மேலும் அப்போது விஜயுடன் போட்டோ ஷூட் எடுத்த நிலையில் துரதிஸ்டவசமாக படம் கைவிடப்பட்டதாக ஒரு பேட்டியில் மகேஷ்பாபு கூறியிருந்தார். இருந்தபோதும் அப்போதே படம் எடுத்து இருந்தால் இந்த அளவுக்கு கிராபிக்ஸ் தொழில்நுட்பம் இருந்திருக்காது.

ஆனால் தற்போது மிகப்பிரம்மாண்டமாக பத்து வருடங்கள் கழித்து பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். இதனால் இப்படம் ரசிகர்கள் வியக்கும் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. ஆனால் விஜய், மகேஷ்பாபு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தாலும் படம் நன்றாகத்தான் இருக்கும் என சில ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.