பொன்னியின் செல்வன் பட நடிகர்களுக்கு செக் வைத்த மணிரத்தினம்.. வச்சாரு பெரிய ஆப்பா

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் இப்படத்தின் படப்பிடிப்பு பல வருடங்களாக நடந்து வந்தது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பிரபு, ரகுமான், ஜெயராம் உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. பொன்னியின் செல்வன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகயுள்ளது. மேலும் இப்படத்தை லைக்கா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் முதல் பாகத்தை செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அடுத்த மாதம் ஜூலை முதல் வாரத்தில் இப்படத்தின் டீசர் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை தஞ்சாவூரில் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஏனென்றால் பொன்னியின் செல்வன் படத்தின் கதை தஞ்சை மண்ணுடன் தொடர்பு உடையதால் அங்கு பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளும் இந்த டீசர் வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என மணிரத்தினம் கட்டளையிட்டுள்ளாராம். ஆனால் இப்படத்தில் ஏகப்பட்ட பெரிய திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்.

எல்லோரும் தங்களது படங்களில் பிசியாக உள்ளனர். ஆனால் மணிரத்தினம் யார் எந்த படத்தில் நடித்தாலும் சரி டீசர் வெளியீட்டுக்கு கண்டிப்பாக வந்து கலந்துகொண்டு வேண்டும் என கூறியுள்ளார். இதனால் தற்போது இந்த படத்தில் நடித்த நடிகர்கள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்துள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.