மகாபாரதம் எப்போது தொடங்கும்.. அதிர்ச்சி தகவலை கூறிய ராஜமௌலி

பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலியின் இயக்கத்தில் சமீபத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி நல்ல வசூல் லாபம் பார்த்தது. பல மொழிகளில் வெளியாகியிருந்த இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், பாராட்டுக்களும் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து ராஜமௌலியின் அடுத்த திரைப்படம் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் ராஜமவுலி அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கப் போவதாகவும் ஒரு தகவல் உலா வந்தது.

தற்போது அதை உறுதி செய்திருக்கும் ராஜமவுலி இன்னும் சில தகவல்களையும் கூறி இருக்கிறார். அதாவது அவர் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கிவிட்டு இன்னும் சில கதைகளையும் இயக்குவதற்கு திட்டமிட்டு இருக்கிறாராம். அந்த வகையில் அவர் அடுத்தடுத்த நான்கு திரைப்படங்களை இயக்கப் போவதாக கூறியிருக்கிறார்.

இது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. பொதுவாகவே ராஜமவுலி ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு சில கால அவகாசம் எடுத்துக் கொள்வார். ஆனால் தற்போது அவர் கூறியிருக்கும் தகவலின்படி அடுத்தடுத்த திரைப்படங்கள் அவருடைய இயக்கத்தில் வெளியாக இருக்கிறது.

மேலும் அவருடைய கனவு திரைப்படமான மகாபாரதம் பற்றியும் அவர் குறிப்பிட்டு கூறியிருக்கிறார். ராஜமவுலிக்கு புராண காவியமான மகாபாரதத்தை இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு மற்றும் லட்சியமாக இருக்கிறது. எப்படியாவது அந்த காவியத்தை உருவாக்கி விட வேண்டும் என்று அவர் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆனால் இப்போது இருக்கும் பிசியான வேலையில் அவரால் அந்த திரைப்படத்தை தொடங்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் மகாபாரதம் போன்ற கதையை இயக்குவதற்கு நிறைய கால அவகாசம் தேவைப்படும்.

அதனால் இப்போது மகாபாரதத்தை இயக்குவது குறித்து நான் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அவர் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். இது மகாபாரத கதையை எதிர்பார்த்து காத்திருந்த அவருடைய ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாக தான் இருக்கிறது. இருப்பினும் ராஜமவுலி எப்படியாவது அந்த கதையை பிரம்மாண்டமாக உருவாக்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.