மங்காத்தா 2-ல் வாய்ப்பு கேட்டு நச்சரிக்கும் பிரபலம்.. கதையையே மாற்றிய வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படம் வெளியானது. அர்ஜுன், த்ரிஷா, ராய் லட்சுமி, அஞ்சலி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்த அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

ஆன்ட்டி ஹீரோவாக நடித்திருந்த அஜித்தின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது. 24 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடியை நெருங்கி சாதனை படைத்தது. அந்த வகையில் அஜித்தின் கேரியரில் இந்த படம் ஒரு முக்கிய இடத்தையும் பிடித்தது.

Also read: அஜித் பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய், ஆக்ஷனுக்கு லீவு விடும் இளைய தளபதி

இப்படம் வெளிவந்து பத்து ஆண்டுகள் கடந்த பிறகும் கூட இன்னும் ரசிகர்களால் விரும்பப்பட்டு வருகிறது. இதனாலேயே வெங்கட் பிரபு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு தயாராகி இருக்கிறார். தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் அவர் படு பிஸியாக இருக்கிறார்.

இந்த இரண்டாம் பாகத்தில் அஜித் வேற லெவல் கதாபாத்திரத்தை ஏற்பார் என்று கூறப்பட்டாலும், விஜய் நடிப்பதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. கூடிய விரைவில் மங்காத்தா 2 பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மங்காத்தா படத்தின் முதல் பாகத்தில் நடித்த வைபவ் இரண்டாம் பாகத்திலும் எனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறாராம். முதல் பாகத்தில் அவருடைய கதாபாத்திரம் இறப்பது போன்று காட்டப்பட்டிருக்கும். அப்படி இருக்கும் போது இரண்டாம் பாகத்தில் அவரால் எப்படி நடிக்க முடியும் என்பது தான் பலரின் கேள்வி.

Also read : லிங்குசாமியை அடுத்து விழி பிதுங்கி நிற்கும் வெங்கட்பிரபு.. 100 கோடி வசூல் எடுத்தும் இதான் நிலைமை

இதைத்தான் அவரிடம் வெங்கட் பிரபுவும் கேட்டுள்ளார். அதற்கு வைபவ் அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு வாய்ப்பு கொடுத்தே தீர வேண்டும் என்று தினமும் போன் போட்டு நச்சரித்திருக்கிறார். இதனால் வெங்கட் பிரபு திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து இருக்கிறாராம்.

அதாவது இந்த இரண்டாம் பாகத்தில் வைபவின் சிறு வயது சம்பந்தப்பட்ட சில காட்சிகள் இடம் பெற இருக்கிறதாம். பொதுவாக வெங்கட் பிரபுவின் படங்களில் அவரின் சென்னை 28 கூட்டணி நண்பர்கள் ஒரு காட்சியிலாவது இடம் பிடித்து விடுவார்கள். அப்படித்தான் வைபவின் கேரக்டரும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read : அஜித்,விஜய் 50 படங்களில் செய்யாததை சாதித்துக் காட்டிய சூர்யா.. இனியாவது முடியுமா தளபதி.?