மலைக்க வைத்த விக்ரம் பட வசூல்.. அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்த ஆண்டவர்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் தற்போது நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த பிறகும் இன்னும் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது.

அந்த அளவுக்கு கமல் இந்த படத்தில் மிகவும் மிரட்டலாக நடித்து அனைவரையும் கவர்ந்து இருக்கிறார். இதனால் இந்த படத்திற்கு எந்த ஒரு எதிர்மறை விமர்சனங்களும் இல்லாமல் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது.

இந்தப் படம் இதுவரை 250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கமல் நடித்த திரைப்படங்களிலேயே அதிக வசூலைப் பெற்ற ஒரே திரைப்படம் இந்த படமாகத்தான் இருக்க முடியும். இதனால் கமல் தற்போது ஆனந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்.

இப்படி ஒரு வரவேற்பை எதிர்பார்க்காத அவர் இதற்கு காரணம் ராஜ்கமல் நிறுவனத்திற்கு உறுதுணையாக இருக்கும் மகேந்திரன் தான் என்று பலரிடமும் புகழ்ந்து பேசி வருகிறாராம். இவர்தான் தற்போது கமலின் தயாரிப்பு நிறுவனத்திற்கு எல்லாமுமாக இருந்து வருகிறார்.

மேலும் சிவகார்த்திகேயனை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு படம் செய்ய சம்மதிக்க வைத்ததும் இவர்தானாம். அந்த வகையில் கமல் தற்போது முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரிக்கும் ஏற்பாடுகளை மகேந்திரனிடம் தான் கொடுத்திருக்கிறாராம்.

அதனால் அவரும் ரஜினி, விஜய் என்று அடுத்தடுத்த டாப் ஹீரோக்களை வைத்து படம் செய்யும் யோசனையை கமலுக்கு கூறியிருக்கிறார். அதை கேட்ட கமலும் தற்போது முன்னணி நடிகர்களிடம் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சமீபத்தில் கூட அவர் ரஜினி, விஜய்யை வைத்து படம் செய்யும் திட்டம் இருக்கிறது என்று ஒரு பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.