மாமா டவுசர் கழண்டுச்சே.. மகா சங்கமத்தில் கோபிக்கு கிடைத்தல் லிப் டு லிப் கிஸ்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் உடன் கடந்த ஒருவாரமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இணைந்து மகாசங்கமத்துடன் ஒளிபரப்பாகிறது. இவர்கள் அனைவரும் பாக்யாவின் மாமனாரின் பிறந்தநாள் விழாவிற்காக மூர்த்தி குடும்பம் பாக்யா வீட்டிற்கு வந்திருக்கிறது.

எனவே இந்த விழாவிற்கு ராதிகாவை தன்னுடைய வருங்கால கணவருடன் வருமாறு பாக்யா அழைத்ததால், கோபியை தன்னுடன் வருமாறு ராதிகா கண்டிப்பாக கூறுகிறாள். ஆதலால் என்ன செய்து, இந்த பிறந்தநாள் விழாவை எப்படியாவது தடுக்கவேண்டும் என கோபி திட்டம் தீட்டி அதில் வசமாக சிக்கிக் கொள்கிறார்.

அதாவது தாத்தாவின் பிறந்த நாள் விழாவின் போது தனக்கு நெஞ்சு வலி வந்த மாதிரி நடிக்கிறான். அப்போது மூர்த்தி கோபிக்கு முதல் உதவி செய்யும் நோக்கத்தில் கோபியை படுக்கப்போட்டு நெஞ்சிலே குத்துவதும், வாயோடு வாய் வைத்து ஊதி மூச்சு கொடுப்பது போன்ற முதலுதவிகளை ஆக்ரோசமாக செய்கிறான்.

அதன்பிறகு ஒருகட்டத்தில் கோபி தனக்கு நெஞ்சு வலி சரியாகி விட்டது என அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடுகிறான். பிறகு ராதிகாவின் வீட்டிற்கு சென்று தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இருப்பதாக கூறி, அவளுடன் பாக்யா வீட்டிற்கு வராமல் இருக்கும்படி, ராதிகா வாயிலிருந்தே அவனை வர வேண்டாம் என சொல்ல வைக்கிறான்.

இப்படி மகா சங்கமத்தில் கடைசி நாளான இன்று சின்னத்திரை ரசிகர்களை கோபியின் நடிப்பு வயிறு குலுங்க வைக்கும் அளவுக்கு சிரிப்பை ஏற்படுத்தியது. ஒருபக்கம் கோபியின் கதாபாத்திரம் இல்லை என்றால் இந்த சீரியலை சுவாரசியமே இல்லை.

கோபிகாகவே இந்த சீரியலை பார்க்கலாம் போல. அப்புறம் இரு பொண்டாட்டி எல்லாம் வைத்துக் கொள்வதே இந்த காலகட்டத்தில் சாத்தியமா, அப்படி வைத்துக் கொண்டால் என்னென்ன பிரச்சனை எல்லாம் சந்திக்க வேண்டும் என்பதை கோபியின் கதாபாத்திரம் தெளிவாக காட்டுகிறது,

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.