மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் கெட்டப்.. வைரலாகும் புகைப்படம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் மற்றும் டான் படம் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது. இதே வெற்றியுடன் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தன் படங்களில் பணியாற்றி வருகிறார்.

தற்போது பிரின்ஸ் என்ற தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டின் மாடல் அழகி நடிக்கிறார்.

இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தகவல் வெளியான நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்நிலையில் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. இது மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனின் கெட்டப் என பலரும் கூறிவருகிறார்கள். பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆவதால் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்று இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan

டீசர்ட்டில் செம ஸ்டைலிஸ் ஆக இருக்கும் சிவகார்த்திகேயனின் இந்த புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் எந்த அறிவிப்பும் இல்லாமல் சாதாரணமாக இந்த புகைப்படங்கள் வெளியானது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் உள்ளது.

Sivakarthikeyan

இந்த புகைப்படங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டராக வந்திருந்தால் இன்னும் மாஸாக இருந்திருக்கும் என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை கூறி வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் கெட்டப்.. வைரலாகும் புகைப்படம் appeared first on Cinemapettai.