மீடியா என்றாலே தெறித்து ஓடும் 5 பிரபலங்கள்.. இன்று வரை அஜித் பேட்டி கொடுக்காததன் பின்னணி

சினிமாவை தாண்டி நட்சத்திரங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மீடியாவின் பங்கு மிகப்பெரியது. ஒரு சில பிரபலங்கள் மீடியாவுக்கு அடிக்கடி பேட்டி கொடுப்பது, பட ப்ரமோஷனில் கலந்து கொள்வது என மீடியாவுடனும், ரசிகர்களுடனும் தொடர்பில் உள்ளனர். சில பிரபலங்கள் மீடியாவை கண்டு கொள்வது இல்லை, தங்களுடைய படங்களின் ப்ரமோஷனுக்கு கூட வருவதில்லை.

கவுண்டமணி: ஆரம்ப நாட்களில் தனியாக நகைச்சுவை செய்து கொண்டிருந்த கவுண்டமணி, செந்திலுடன் இணைந்து ஒரு வெற்றி கூட்டணியை உருவாக்கினார். இவர்களுடைய காம்போ ஹாலிவுட்டின் லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பிடப்படுகிறது. கவுண்டமணியை பேட்டிகள் மற்றும் பட ப்ரமோஷனில் பார்ப்பது மிகவும் அரிது. எப்போதாவது அவர் கலந்து கொள்ளும் திருமண விழாக்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் மற்றவர்களால் பகிரப்படும்.

அஜித் குமார்: கோலிவுட்டில் அஜித்திற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆனால் அஜித்தை திரைப்படத்தில் தவிர, பொது வெளியில் காண்பது அரிதினும் அரிது. அஜித் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. அஜித்தின் சமீப கால படங்களுக்கு ப்ரமோஷன் நிகழ்ச்சிகள், ஆடியோ லாஞ்சுகள் கூட நடப்பது இல்லை. முன்பெல்லாம் அஜித்தை கண்டாலே மீடியாக்கள் சுற்றி கொள்வார்கள். ஏதாவது வார்த்தைகள் அவரிடமிருந்து பிடிங்கி விடுவார்கள். அதை வைத்து பெரிய ரோடு போட்டு விடுவார்கள். அதனால் இன்றுவரை பத்திரிக்கையாளர்களை சந்திக்க தயங்குகிறார் அஜித்.

நயன்தாரா: நயன்தாரா பொதுவாக தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகள் ஏதும் கொடுப்பதில்லை, அவருக்கென்று சமூக வலைத்தளங்களில் கணக்குகளும் இல்லை. அவருடைய படங்களுக்கு கூட ப்ரமோஷன் கொடுப்பதில்லை. சமீபத்திய தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் ஏன் ப்ரமோஷனில் கலந்து கொள்வதில்லை என்ற கேள்விக்கு நயன்தாரா கொடுத்த பதில் அப்போது மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.

மாதவன்: மாதவன் சமீபமாக தமிழ் மீடியாக்களில் அந்த அளவுக்கு தோன்றியதில்லை, எந்த ஒரு நேர்காணலிலும் வருவதுமில்லை. கடைசியாக இறுதிச்சுற்று படத்திற்காக ஒரு சில பேட்டிகள் கொடுத்தார்.

விக்ரம் : விக்ரம் தன்னுடைய ரசிகர்களை மிகவும் மதிக்கக்கூடிய நடிகர்களில் ஒருவர். ஆனால் தன்னுடைய படங்களுக்காக எந்த ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது இல்லை. தொலைக்காட்சிகளிலும் இவரை பார்ப்பது அரிதாகி விட்டது.