மீண்டும் சாதிக்கத் துடிக்கும் சண்முக பாண்டியன்.. வேற லெவல் உருவாகும் புதிய அவதாரம்

தற்போது சினிமாவில் கேப்டன் விஜயகாந்தின் பங்களிப்பு இல்லை என்றாலும் அவரது ரசிகர்கள் தற்போது வரை அவருக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் அவரது இளைய மகனான சண்முகபாண்டியன் சகாப்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

இதைத் தொடர்ந்து மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தால் அந்த படம் வெற்றி கொடுக்காததால் தற்போது வெப் தொடரில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த வெப் தொடரை சசிகுமார் இயக்கவுள்ளார். தற்போது சசிகுமார் காமன்மேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு இந்தத் தொடரை இயக்குவார் என கூறப்படுகிறது.

இது பாரதிராஜாவின் கனவு படமான குற்றப்பரம்பரை கதையை தான் சசிகுமார் தற்போது இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே குற்றப்பரம்பரை படத்தை இயக்குவதில் பாரதிராஜா மற்றும் பாலா இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. தற்போது பாரதிராஜாவின் அனுமதி பெற்று சசிகுமார் இந்த தொடரை இயக்க உள்ளார்.

எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை என்ற நாவலைத் தழுவி இந்த தொடர் உருவாகிறது. மேலும் இதற்கான வேலைகளை சசிகுமார் தற்போது சத்தமே இல்லாமல் செய்து வருகிறார் என கூறப்படுகிறது. மேலும், மிக விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகயுள்ளது.

சண்முகபாண்டியனின் திரைப்படங்கள் வெற்றி பெறாத நிலையில் வெப்சீரிஸ் மூலமாக ரசிகர்களின் கவனத்தை பெறலாம் என இந்த வெப் தொடரில் நடிக்க சமாளித்துள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தற்போது ரசிகர்கள் பெரும்பாலும் திரைப் படங்களைப் பார்ப்பதை காட்டிலும் வெப் தொடர்களையே பார்த்து வருகிறார்கள்.

இதன் மூலம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுவிட்டால் வெள்ளித்திரையில் நடித்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தற்போது களத்தில் குதித்துள்ளார் சண்முக பாண்டியன். அவரது இந்த முயற்சி வெற்றி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.