மீனாவை டம்மி ஆக்கிய கேடுகெட்ட வில்லி.. ஒரு மாதம் டேரா போடும் சக்களத்தி

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மனைவியின் மருத்துவ செலவிற்காக வாங்கிய 5 லட்சத்தை திருப்பி தர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வீட்டை விட்டு வெளியேறிய கதிர், புதிதாக ஹோட்டல் ஒன்றை துவங்கியுள்ளார்.

அதில் முதல் நாள் 1000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால், அதைக் கேலி கிண்டல் செய்த முல்லையின் அக்கா மல்லி, அவர்களை மதுரைக்கு வந்து தன்னுடைய பண்ணையில் எடுபிடி வேலை செய்யுமாறு ஏளனமாக பேசுகிறார்.

Also Read: சூரிய வம்சத்தை மிஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ்!

ஆத்திரத்தில் கதிர், இந்த கடையில் ஒரே மாதத்தில் நல்ல லாபம் காட்டுகிறேன் என மல்லியிடம் சபதம் செய்கிறார். இப்படி புதிதாக துவங்கிய கடைக்கு வந்து வாழ்த்து சொல்லிவிட்டு போகாமல், கண்டபடி பேசும் மல்லியை, ‘மதுரைக்கு கிளம்ப வேண்டியதுதானே! உனக்கு இன்னும் இங்க என்ன வேலை’ என முல்லை திட்டுகிறார்.

உடனே மல்லி, ‘ஒரு மாதத்தில் கதிர் சொன்னபடி இந்த கடையில் லாபம் வராமல் உருப்படாமல் போவதை பார்ப்பதற்காகவே குன்றக்குடியில் இருக்கப் போகிறேன்’ என முல்லையிடம் தெனாவட்டாக சொல்கிறார்.

Also Read: 90’s கதையை இப்ப உருட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!

ஆனால் முதல் நாளில் கதிரின் பாண்டியன் ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்ட அனைவருக்கும் அந்த உணவு பிடித்துப்போனது என்பதால் அடுத்தடுத்த நாட்களின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து ஹோட்டலில் லாபம் வரத்தான் போகிறது.

ஏற்கனவே மூர்த்தியை திருமணம் செய்து கொள்ள மணமேடை வரைப்போல மல்லி, திருமணமாகி குழந்தை இருக்கும் ஒருவருடன் ஓடிப் போனதால், தனத்தின் சக்காளத்தி ஆன அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கெட்டழிய வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு கதிர் தன்னுடைய பாண்டியன் ஹோட்டலின் மூலம் ஒரே மாதத்தில் லாபத்தை காட்டி செம பல்பு கொடுக்கப் போகிறார்.

Also Read: டாப் சீரியலை விரட்டியடித்த சென்டிமெண்ட் சீரியல்!