முதல் படத்திலேயே சாதித்துக் காட்டிய சிபிச் சக்கரவர்த்தி.. கஷ்டப்பட்டு கடந்து வந்த பாதை

தற்போது திரும்பும் பக்கமெல்லாம் டான் திரைப்படத்தைப் பற்றிய பேச்சுதான் அதிகமாக இருக்கிறது. அதிலும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த படத்தை பாராட்டி ஏகப்பட்ட கருத்துகள் குவிந்து வருகிறது. இப்படி படம் வெளியான ஒரே நாளிலேயே ரசிகர்களை திருவிழா போல் கொண்டாட வைத்துள்ளது.

அந்த வகையில் அறிமுக திரைப்படத்திலேயே இப்படி ஒரு பெருமையை பெற்றிருக்கும் சிபி சக்ரவர்த்திக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இப்படி ஒரு வெற்றியை பெறுவதற்கு அவர் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது.

ஒரு இயக்குனர் கனவோடு இருந்த சிபிச்சக்கரவர்த்தி ஆரம்ப காலத்தில் டெலிவரி பாய் உள்ளிட்ட சிறு சிறு வேலைகளை செய்து இருக்கிறார். அதன் மூலம் இவர் இயக்குனர் அட்லி இயக்கிய தெறி, மெர்சல் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார்.

அந்த இரண்டு படங்களிலும் இவர் சிறுசிறு கேரக்டர்களிலும் தலை காட்டி இருக்கிறார். அதன் பிறகு இந்த திரைப்படத்தின் கதையை தயார் செய்த அவர் இயக்குனர் வாய்ப்புக்காக மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். பிறகு ஒரு வழியாக டான் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதுவும் முதல் திரைப்படத்திலேயே லைகா புரொடக்ஷன் போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனத்திற்கு இவர் படம் இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் டாக்டர் என்ற மிகப் பெரிய வெற்றி திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயனை இயக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.

இப்படி தனக்கு கிடைத்த இந்த வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக்கொண்ட சிபிச்சக்கரவர்த்தி தற்போது டான் திரைப்படத்தின் மூலம் கவனிக்கப்படும் இயக்குநராக மாறியிருக்கிறார். இப்படம் தமிழ் சினிமாவில் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தையும் கொடுத்துள்ளது. நிறைய கஷ்டங்களுக்கு இடையில் ஒரு இயக்குனராக சாதித்திருக்கும் இவர் இன்னும் பல துயரங்களை அடைய வேண்டும் என்று தற்போது அவரை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.