முழுவீச்சில் விடுதலை படப்பிடிப்பு.. புகைப்படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படம் விடுதலை. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக சூடி நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. மேலும் விடுதலை படத்தில் சூரி கதாநாயகனாக நடித்த வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் உள்ளார். இதனால் இவர் நடிப்பில் எந்த படங்களும் தற்போது வெளியாகாமல் உள்ளது.

இந்நிலையில் இந்த விடுதலை படத்தின் படப்பிடிப்பு தாமதத்திற்கு முக்கிய காரணம் விஜய் சேதுபதி என்று கூறப்பட்டது. அதாவது விஜய் சேதுபதி பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருவதால் இப்படத்தின் சூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாத சூழலால் படப்பிடிப்பு தள்ளி போனதாக கூறப்படுகிறது.

மேலும் தற்போது விஜய் சேதுபதி கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மீண்டும் விடுதலை படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த புகைப்படங்களை விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மாஸாக சூரி துப்பாக்கி ஏந்தி நிற்கிறார். அவர்களிடமிருந்து பதுங்கி விஜய் சேதுபதி மறைந்து இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இதனால் விடுதலை படத்திலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை தற்போது முழு வீச்சில் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் மிக விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

viduthalai

viduthalai

viduthalai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.