மூன்றே நாளில் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல்.. 18 வருஷமா சினிமா பக்கமே வராத முத்து பட நடிகை

சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு வெளியில் பெண் கிடைப்பது மிகக் கடினம் என்ற பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம். ஒரு ஆணுக்கே இப்படி என்றால் ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்ள பல நிபந்தனைகள் வைக்கப்படும். அதுவும் அந்த நடிகை கிளாமர் ரோலில் நடித்தால் அவ்வளவுதான்.

அப்படி ரஜினி பட நடிகை ஒருவர் சினிமாவால் தான் பட்ட கஷ்டங்களை ஒரு பேட்டியில் கூறி இருந்தார். தலைவாசல் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை விசித்ரா. இவர் ரஜினியின் முத்து படத்தில் வேலைக்கார பெண்ணாக நடித்திருப்பார்.

Also Read : வில்லியாக ரஜினியை உரசிப் பார்த்த 5 நடிகைகள்.. சண்டி ராணியாக சீறிய விஜயசாந்தி

விசித்ரா பெரும்பாலான படங்களில் கிளாமர் ரோல்களில் தான் நடித்திருந்தார். இந்நிலையில் விசித்ரா ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் விசித்ரா கிளாமர் ரோலில் நடித்ததால் கணவரின் உறவினர்கள் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளனர்.

இதனால் திருமணமான மூன்றே நாளில் எங்களது உறவில் விரிசல் விழுந்து விட்டதாக விசித்ரா கூறியிருந்தார். மேலும் இந்த பிரச்சனையை பெரிதாக்க கூடாது என்று 18 வருடமாக சினிமா பக்கமே வராமல் இருந்துள்ளார். அந்த சமயத்தில் மைசூரில் ஹோட்டல் நடத்தி வந்த போது சிலர் இவரை பேட்டி எடுத்துள்ளனர்.

Also Read : ரஜினி, கவுண்டமணி கூட்டணியில் செம்ம லூட்டி அடித்த 6 படங்கள்.. பத்த வச்சுட்டியே பரட்ட!

அவர்கள் மீண்டும் சினிமாவில் வரவேண்டும் என விசித்ராவை கேட்டுக் கொண்டுள்ளனர். ஆகையால் குழந்தைகள் எல்லாம் வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தாராம். மேலும் அவரது பிள்ளைகளுக்கு 13 வயது வரை விசித்ரா ஒரு நடிகை என்பதே தெரியாதாம். அந்த வயதிலேயே யூடியூப் முலம் பல விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அதையெல்லாம் பார்க்கும் போது நான் நடித்த கிளாமர் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றும் என விசித்ரா கூறியிருந்தார். மேலும் இவர் வெள்ளித்திரையில் இருந்து சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். விசித்ரா சினிமாவில் 18 வருடம் இடைவெளி விடாமல் நடித்திருந்தால் அவருக்கான அங்கீகாரம் கிடைத்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Also Read : புதுவிதமான பிரம்மாண்டத்தில் உருவாகும் பாபா.. இந்த காட்சியல்லாம் தூக்குங்க என கட்டளையிட்ட ரஜினி