யாரும் எதிர்பார்க்காமல் செய்த உதவி.. விக்ரம் வெற்றி கமலை ரொம்ப மாற்றிவிட்டது.!

உலகநாயகன் கமலஹாசன் கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளியான பாடகர் திருமூர்த்தியின், படிப்பு செலவை தானே ஏற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவித்தது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருந்தார்.

இப்பாடலை சமூக வலைத்தளத்தின் மூலமாக திருமூர்த்தி பாடி அசத்தியிருந்தார். இவர் பாடியது வைரலானதையடுத்து, இசையமைப்பாளர் டி இமான் இவரது இசையில், சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் வா சாமி பாடலை பாட வைத்து வாய்ப்பு வழங்கினார்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கமலஹாசன் பாடிய பத்தல பத்தல பாடல் வைரலானது. இந்த பாடலை திருமூர்த்தி சமுக வலைதளத்தின் மூலமாக தனது சொந்த குரலில் பாடியதையடுத்து, கமல்ஹாசன் திருமூர்த்தியை நேரில் வரவழைத்து பாராட்டினார்.

மேலும் மாற்றுத்திறனாளியான திருமூர்த்திக்கு திரைப்படங்களில் பாட வேண்டும் என்ற ஆசையுள்ள நிலையில், இசைப்புயல் எ.ஆர் ரஹ்மானின் கே.எம்.மியூசிக் கான்சர்வட்டரி இசைப்பள்ளியில் திருமூர்த்தியை சேர்த்து படிக்க வைக்க கமலஹாசன் பரிந்துரைத்துள்ளார்.

இதற்கு ஏ.ஆர்.ரஹ்மானும் சம்மதம் தெரிவித்த நிலையில், திருமூர்த்தியின் படிப்பு செலவை தானே ஏற்றுக்கொள்வதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதனை கேட்ட திருமூர்த்தி சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் வாயடைத்து பொய் நின்றுள்ளார்.

மேலும் கமலஹாசன் மாற்றுத்திறனாளி பாடகரான திருமூர்த்தி மேலும் பல படங்களில் பாடவேண்டும் என்று இப்படி ஒரு வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது, அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து தான் நடிக்கப்போகும் திரைப்படங்களில் திருமூர்த்தியின் குரலில் பாடல்கள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.