யுவன் செயலால் அதிருப்தியில் இளையராஜா.. என்ன தம்பி இப்படி பண்ணிட்டீங்க!

யுவன் ஷங்கர் ராஜா தனது தந்தை இசைஞானி இளையராஜாவின் சதாபிஷேகத்திற்கு கலந்துக் கொள்ளாமல் இருந்த காரணம் தற்போது வெளியாகியுள்ளது. 80 களில் தனது இசையின் மூலமாக உலகளவில் உள்ள அனைத்து ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் இளையராஜா.

இவரை தொடர்ந்து அவரது மூத்த மகன் கார்த்திக் ராஜா சில திரைப்படங்களில் இசையமைத்திருந்த நிலையில் தற்போது மார்க்கெட் இல்லாமல் உள்ளார். ஆனால் யுவன் ஷங்கர் ராஜா 2000 ஆம் ஆண்டிலிருந்து இசையமைத்து அவரது தந்தையைப் போலவே இன்று வரை உலக அளவில் ரசிகர்களை தனது பாடல்களின் மூலம் ஈர்த்து வருகிறார்.

2014 ஆம் ஆண்டில் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய யுவன், 2015 ஆம் ஆண்டில் சப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்துக்கொண்டு ஒரு மகளும் உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா மதம் மாறியதால், தந்தைக்கும் மகனுக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது. ஆனால் பொது மேடைகளில் சகஜமாக இருவரும் நடந்துக் கொள்வர்.

இதனிடையே சமீபத்தில் இளையராஜாவிற்கு 80 வயது நிறைவுப் பெற்றதையடுத்து, திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோவிலில் இளையராஜாவிற்கு சதாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் அமைந்துள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் யாகசாலை பூஜை செய்யப்பட்டு ஆயுள் விருத்தி வேண்டி 85 கலசங்கள் வைக்கப்பட்டு சதாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, இயக்குனர் பாரதிராஜா,கங்கை அமரன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். ஆனால் யுவன் சங்கர் ராஜா கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார். இதற்கு காரணம், யுவன் ஷங்கர் ராஜா, இஸ்லாமிய மதத்திற்கு மாறியதால் கோவிலில் நடைபெறக்கூடிய சம்பிரதாயங்களில் கலந்துக் கொள்ளக்கூடாது என்பதால் தனது தந்தையின் சதாபிஷேக விழாவிற்கு வராமல் இருந்துள்ளார்.

இதனால் இளையராஜா கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், தற்போது தந்தையை விட யுவனுக்கு அவர் பின்பற்றும் மதத்திலுள்ள கோட்பாடுகளே முக்கியம் என வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

The post யுவன் செயலால் அதிருப்தியில் இளையராஜா.. என்ன தம்பி இப்படி பண்ணிட்டீங்க! appeared first on Cinemapettai.