ரஜினி சாருக்கு மட்டும்தான் அந்த மனசு வரும்.. 20 வருடங்களுக்குப் பின் மனம் திறக்கும் KS ரவிக்குமார்

ரஜினிக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து ஒரு நிலையான ஹீரோவாக மாற்றியவர் கேஎஸ் ரவிக்குமார். இவர்கள் இருவரும் சினிமாவைத் தாண்டியும் நல்ல நண்பர்களாக உள்ளனர். மேலும் தற்போது ரஜினி நடிக்க உள்ள ஜெயிலர் படத்திலும் கே எஸ் ரவிக்குமார் பணியாற்றயுள்ளார்.

இந்நிலையில் கேஎஸ் ரவிக்குமார் முதல்முறையாக ரஜினியை வைத்து இயக்கிய முத்து படம் 1995 இல் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதினால் மீண்டும் இதே கூட்டணியில் உருவான படம்தான் படையப்பா. அப்போது வெளியான எல்லா படங்களின் வசூலையும் படையப்பா படம் முறியடித்தது.

இதுகுறித்து கேஎஸ் ரவிக்குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். படையப்பா படம் இவ்வளவு ஹிட்டாகும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என கூறினார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இணையாக நீலாம்பரி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ரம்யா கிருஷ்ணனும் பாராட்டை பெற்றார்.

அதேபோல் சிவாஜியும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு படையப்பா படத்தை குறித்து கேஎஸ் ரவிக்குமார் ஒரு உண்மையை சொல்லியுள்ளார். அதாவது படையப்பா படம் ரஜினி தயாரிப்பில் எடுக்கப்பட்டது.

இப்படத்தின் பட்ஜெட் எவ்வளவு ஆகும் என ரஜினி கேட்டுள்ளார். அதற்கு கே எஸ் ரவிக்குமார் 5 கோடி பட்ஜெட் ஆகும் என கூறி உள்ளார். அதனினும் குறைவாகவே படத்தை எடுத்து முடித்து விட்டனர். படம் எடுத்தது போக மீதமுள்ள பணத்தை கேஎஸ் ரவிக்குமார் ரஜினியிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் ரஜினி மீதமுள்ள பணத்தை படையப்பா படத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு தருமாறு கூறிவிட்டாராம். அதன் பிறகு படையப்பா படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகி 45 கோடிகளுக்கு மேல் வசூல் வேட்டை ஆடியது. அந்த மனசு ரஜினி சாருக்கு தான் வரும் என கே எஸ் ரவிக்குமார் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.