ராதிகாவின் கணவர் முன்பு அசிங்கப்பட்ட கோபி.. காலில் விழுந்து கெஞ்சிக் கதறும் அவலம்!

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா தான் தன்னுடைய மனைவி என்ற உண்மையை குடித்துவிட்டு கல்லூரி காதலி ராதிகாவிடம் கோபி உளறிய கொட்டிவிட்டான். இதன்பிறகு ராதிகா, கோபியின் மீது கடும் கோபத்தில் இருக்கிறாள். உயிர் தோழியான பாக்யாவின் கணவர்தான் கோபி என தெரிந்ததும் ராதிகா தன்னுடைய தோழிக்கு எந்த துரோகமும் செய்யக்கூடாது என திட்டவட்டமாக இருக்கிறாள்.

ஆனால் ராதிகாவின் அம்மா அவளுடைய முடிவை மாற்றிவிட பார்க்கிறார். இருப்பினும் அதற்கெல்லாம் அசராத ராதிகா, வீட்டிற்கு மறுபடியும் வந்து சமாதானப்படுத்த முயற்சித்த கோபியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறாள். கோபி ராதிகாவின் காலை பிடித்து கெஞ்சி கதறி தன்னை ஏற்றுக் கொள்ளும்படியும், இனி புது வாழ்க்கையைத் துவங்கலாம் என்றும் ராதிகாவிடம் மண்டியிட்டு மன்றாடுகிறான்.

இதிலும் அதை ஏற்காத ராதிகா, இனியும் கோபியின் பொய் பித்தலாட்டத்தை நம்பத் தயாராக இல்லை. இந்த சம்பவம் நடக்கும்போது ராதிகாவை தடுத்து நிறுத்த அவளுடைய அம்மா முயற்சித்தாலும், ராதிகா இருக்கும் கோபத்திற்கு அவளுடைய அம்மா சொல்வது எல்லாம் எடுபடவில்லை.

மேலும் கோபியை ராதிகா கழுத்தைப் பிடித்து வீட்டைவிட்டு தள்ளும்போது, அதை ராதிகாவின் முன்னாள் கணவர் ராஜேஷ் பார்த்து விடுகிறான். ஏற்கனவே ராதிகா-கோபி இடையே இருக்கும் உறவை எப்படியாவது அத்துவிட வேண்டும் என பாக்யா குடும்பத்தினருக்கு ராஜேஷ் துப்பு கொடுத்த நிலையில், எதுவும் செய்யாமலேயே இவர்கள் இருவரும் பிரிகின்றனர் என்பதை நினைத்து ராஜேஷ் சந்தோஷப்படுகிறார்.

மேலும் இந்த சமயத்தை சரியாக பயன்படுத்தி ராதிகாவுடன் தன்னுடைய உறவை மேலும் தொடர முயற்சிப்பான். ஆனால் இதற்கு ராதிகா கொஞ்சம் கூட இடம் கொடுக்க மாட்டாள். கோபியை விட ராஜேஷ் ரொம்ப மோசமானவன் என்பதால், மறுபடியும் அந்த குடிகாரன் உடன் சேர்ந்து வாழ ராதிகா விரும்பமாட்டாள்.

‘எறும்பு ஊர கல்லும் தேயும்’ என்பதுபோல ராதிகாவின் அம்மா ராதிகாவிடம் திரும்பத் திரும்ப கோபியை பற்றி பேசி, ‘அவன் நல்லவன் அவனுடன் உன்னுடைய வாழ்க்கையை துவங்கு பாக்யாவை பற்றியெல்லாம் யோசிக்காதே’ என சொல்லி அவளுடைய மனத்தை மாற்ற முயற்சிப்பார். ஒருகட்டத்தில் ராதிகாவும் கோபியை மன்னித்து அவனை இரண்டாவது திருமணம் செய்து கொள்வாள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.