ரெட் கார்டு தடை நீக்கிய விஜயகாந்த்.. அவர் இல்லையென்றால் என் வாழ்க்கையே போயிருக்கும்

கேப்டன் விஜயகாந்த் சினிமாவில் உள்ள பல பிரபலங்களுக்கு உதவி செய்துள்ளார். தன்னை நாடி வருபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்யக்கூடியவர். தற்போது சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கும் வடிவேலு போன்ற நடிகர்கள் வர விஜயகாந்த் காரணமாக உள்ளார்.

இந்நிலையில் ஒரு நடிகர் தன் சினிமா வாழ்க்கையை காப்பாற்றியது விஜயகாந்த் தான் என ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். ஒருவரை வர்ணனையுடன் கலாய்ப்பதும் கைவந்தவர் நடிகர் பாஸ்கி. இவர் ஒரு கிரிக்கெட் வீரராக பணியாற்றி உள்ளார்.

தேசிய அளவிலான போட்டிகளில் சில மேட்சுகளில் பாஸ்கி செலக்ட் ஆகியுள்ளார். அதாவது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையிலான அணியில் பாஸ்கியும் விளையாடி இருக்கிறார். இவருக்கு இயல்பாகவே கிண்டலாக பேசக்கூடியவர். இந்நிலையில் முன்னணி சேனல் ஒன்றில் பாஸ்கி திரைப்படங்களைப் பற்றி விமர்சித்து வந்தார்.

இவருடைய நக்கலான பேச்சால் பலரும் இவர் மீது கடுப்பில் இருந்தனர். அப்போது ஒரு சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் பாஸ்கி நடிக்கத் தொடங்கினார். இதனால் அப்போது சினிமா துறையில் உள்ள சிலர் இவரை நடிக்க கூடாது என ரெக்கார்ட் தடை போட்டுள்ளனர்.

ஆனால் அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த் பாஸ்கியின் பக்கம் இருந்துள்ளார். அதாவது ஒரு தனிநபரை தாக்கிப் பேசினால் தான் தவறு, சினிமாவை அல்லது சினிமாவில் வரும் கதாபாத்திரங்களை கேலி செய்தால் அதில் ஒன்றும் தவறில்லை என விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதனால் பாஸ்கி மீண்டும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும் அப்போது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் சிம்பு உள்ளிட்ட சிலர் பாஸ்கி பக்கம் இருந்ததாக சமீபத்திய நேர்காணலில் தெரிவித்தார். இவ்வாறு பாஸ்கி போன்று பலருக்கு வாழ்வு தந்துள்ளார் விஜயகாந்த்.

The post ரெட் கார்டு தடை நீக்கிய விஜயகாந்த்.. அவர் இல்லையென்றால் என் வாழ்க்கையே போயிருக்கும் appeared first on Cinemapettai.