வக்கிரத்தின் உச்சம்.. தொகுப்பாளினி டிடி-யை ஆபாசமாக சித்தரித்த சம்பவம்

மக்களுக்கு நடக்கும் அநீதி, பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகள் போன்றவற்றிற்கு எதிராக குரல் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பத்திரிகைகள் தான். இதனால் பத்திரிக்கையாளர்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல மரியாதையும் இருக்கிறது.

ஆனால் பிரபல நாளிதழில் வெளியான ஒரு செய்தியை பார்த்த பலரும் அதிர்ந்து போய் இருக்கின்றனர். அதாவது அந்த பத்திரிக்கையில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி பற்றி மிகவும் ஆபாசமான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. டிடி என்று அழைக்கப்படும் இவர் விஜய் டிவியின் மூலம் மிகவும் பிரபலமானவர்.

அது மட்டுமல்லாமல் முன்னணி தொகுப்பாளினி என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அந்த வகையில் முன்னணி நடிகர்களின் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இவருக்கு முக்கிய இடம் உண்டு.

இப்படி ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவரை பற்றி ஒரு பத்திரிக்கையாளர் மிகவும் மோசமாக செய்தி வெளியிட்டுள்ளார். அதாவது டிடி தன் கணவரை விவாகரத்து செய்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் அவர் தன்னுடைய நேரத்தை சுற்றுலா செல்வது போன்ற விஷயங்களில் செலவழித்து வருகிறார்.

இதைக் குறிப்பிட்டு பேசிய அந்த பத்திரிக்கையாளர் டிடி வெளியிடும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் குறித்து எவ்வளவு ஆபாசமாக கமெண்ட் செய்ய முடியுமோ அவ்வளவு மோசமாக எழுதி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் டிடி சமீபத்தில் நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொண்ட போது நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து புகைப்படம் எடுத்திருந்தார்.

அதையும் அந்த பத்திரிக்கையாளர் கேவலமாக சித்தரித்து குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி தற்போது இணையதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. மேலும் இதை பார்த்த ரசிகர்கள் சம்பந்தப்பட்ட அந்த நாளிதழை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

உடல் முழுவதும் வக்கிரம் நிறைந்த ஒருவனால் மட்டும் தான் இப்படி எழுத முடியும் என்றும், அவரால் ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களுக்கும் அவமானம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இப்படி ஒரு ஆபாசமான செய்தியை அந்த நாளிதழ் எப்படி வெளியிட்டது என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பெண்களை மரியாதையுடன் பார்க்கும் இந்த சமுதாயத்தில் பணத்திற்காக இதுபோன்று வக்கிரம் பிடித்த மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பிரபலத்திற்காக அடுத்தவர்களின் அந்தரங்க விஷயங்களை கேவலமாக சித்தரிக்கும் இது போன்ற பத்திரிகைகளால் தரமான செய்திகளை வெளியிடும் மற்ற பத்திரிகைகளுக்கும் அவமானம் ஏற்படுகிறது.