வனிதாவை தொடர்ந்து புருஷனை விவாகரத்து செய்த பிக் பாஸ் நடிகை.. சுதந்திரம் பறி போனதால் எடுத்த முடிவு

கணவனே கண்கண்ட தெய்வம் என வாழ்ந்த காலம் எல்லாம் மலையேறிப் போனது. இப்போதெல்லாம் கணவன் மனைவிக்கு இடையே சிறிய மனக்கசப்பு ஏற்பட்டாலும், அதைக் கடந்து செல்லாமல் உடனே விவாகரத்து செய்துவிடும் எண்ணம் எளிதில் தோன்றிவிடுகிறது.

அதுவும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரும் சர்ச்சையை கிளப்பிய வனிதா விஜயகுமார், மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டு, பிறகு அவரை விட்டுப் பிரிந்தார்.

இப்போது வனிதாவை போன்றே உருகி உருகி காதலித்து திருமணம் செய்துகொண்ட பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளரான விஜே வைஷ்ணவி, தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து இருக்கிறார். இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு பைலட் ஆக பணிபுரியும் அஞ்சான் என்பவரை திருமணம் செய்துகொண்ட விஜே வைஷ்ணவி ஆறு வருடங்களாக இணைந்து வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து பிரிவதாக முடிவெடுத்திருக்கிறார். திருமணத்திற்கு முன்பே 3 வருடம் அஞ்சான் உடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த விஜே வைஷ்ணவி திருமணத்திற்குப் பிறகு, சுதந்திரம் பறி போனது என நினைத்திருக்கிறார்.

இதனால் அவர்களது உறவின் காரணமாக ஏற்படும் அழுத்தத்தால் தன்னையே தோன்றுகிறதாம். இதனால் தீர ஆலோசனை செய்து கணவரை பிரிவதற்காக முடிவெடுத்திருக்கிறார். விவாகரத்திற்கு பிறகு இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கப் போகின்றனராம்.

எந்தவித மனக்கசப்பும் இவர்களுக்கிடையே இல்லாததால் மனம் ஒத்துப் பிரிகின்றனராம். ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் லொடலொடன்னு பேசியே வெறுப்பேற்றிய உன்னோடெல்லாம் எப்படி சேர்ந்து வாழ முடியும்’ என விஜே வைஷ்ணவியின் விவாகரத்து குறித்த பதிவுக்கு நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர்.

vj-vaishnavi-cinemapettai