வலிமை மிந்த போகும் விக்ரம்.. பல வருடத்திற்கு பின்பு இறங்கி அடிக்கும் ஆண்டவர்

இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில், அதிக வசூல் சாதனை படைத்து உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம், கடந்த ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரிலீசானது முதல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற விக்ரம் திரைப்படம் , பத்து நாட்களில் 200 கோடி வரை சாதனை படைத்துள்ளது. இதனிடையே விக்ரம் திரைப்படம் இந்த ஆண்டு வெளியான அதிக வசூலை ஈட்டிய தமிழ் திரைப்படங்களில் விக்ரம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

முதலிடத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், தல அஜித்தின் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் இடம்பிடித்துள்ளது. இத்திரைப்படம் 200 கோடி வரை வசூல் சாதனையை ஈட்டிய நிலையில், முதல் மூன்று நாட்களிலேயே 150 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்தது

அடுத்ததாக, நடிகர் யாஷ் நடிப்பில், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக உருவான கேஜிஎப் 2 திரைப்படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இத்திரைப்படம் உலகளவில் ஆயிரம் கோடியை வசூல் சாதனை ஈட்டிய நிலையில்,  100 கோடி வரை தமிழகத்தில் வசூல் சாதனை படைத்தது.

இந்த நிலையில்,தற்போது உலக நாயகன் கமலஹாசனின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம், முதல் மூன்று நாட்களில் 100 கோடி வரை தமிழகத்தில் வசூல் சாதனை படைத்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே கேரளாவில் 25 கோடி வரை வசூல் சாதனை படைத்து, தளபதி விஜயின் படங்களின் வரிசையில் விக்ரம் மூன்றாம் இடத்தை பிடித்தது.

மேலும் இத்திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், கண்டிப்பாக 500 கோடி வரை வசூலை ஈட்டி சாதனை படைக்கும் என தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தின் தயாரிப்பாளராகவும் , நடிகராகவும் வசூல் ரீதியான வெற்றிக்கு சந்தோசமாக இருந்த நிலையில், இச்செய்தி அவரை மேலும் குஷிப்படுத்தியுள்ளது.

The post வலிமை மிந்த போகும் விக்ரம்.. பல வருடத்திற்கு பின்பு இறங்கி அடிக்கும் ஆண்டவர் appeared first on Cinemapettai.