வாரிசு படத்திலிருந்து கசிந்த புகைப்படம்.. யோசிக்காமல் பதிவிட்ட ராஷ்மிகா

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு படத்தின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா மற்றும் பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்க தமன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் கதை அரசல் புரசலாக இணையத்தில் வெளியாகி இருந்தது. அதாவது மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். இதனால் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தனது வாரிசை வைத்திருக்கிறார்.

ஆனால் அதை அறிந்த வில்லன்கள் அந்த வாரிசை அழிக்க வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். இதுதான் வாரிசு படத்தின் கதை என சிலர் கூறிவருகின்றனர். இதனால் தான் இப்படம் குடும்ப சென்டிமென்டாக பாசம், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த படமாக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது.

தற்போது ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது சங்கீதாவுடன் ராஷ்மிகா எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த போட்டோ வாரிசு படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

மேலும் இதில் ராஷ்மிகா மந்தனா மற்றும் சங்கீதா ஒரே நிற ஆடையை உடுத்தியுள்ளனர். மேலும் வாரிசு படத்தில் ராஷ்மிகாவிற்க அக்காவாக சங்கீதா நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

sangeetha-rashmika mandanna

இந்நிலையில் வாரிசு படம் வெளியாவதற்கு முன்பே இவ்வாறு புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வருவதால் இயக்குனர் தற்போது கவலையில் உள்ளாராம். ஏற்கனவே இதுபோன்ற வாரிசு படத்தில் விஜய்யின் சூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.