வாரிசு படத்தையும் விட்டுவைக்காத ப்ளூ சட்டை.. 15 லட்சம் கொடுத்தும் அட்டை காப்பி அடிப்பீங்களா!

தளபதி 66 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள தளபதி 66 திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் தளபதி விஜய்யின் பிறந்தநாளன்று வெளியானது.

அந்த போஸ்டரில் தளபதி விஜய் ஸ்டைலாக கோட்சூட் அணிந்து, தொடையில் ஒரு கையை வைத்து மாசாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் தி பாஸ் ரிட்டன்ஸ் என்ற வாசகங்களுடன் வாரிசு என்ற இப்படத்தின் டைட்டிலும் அந்த போஸ்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுவாக சமூக வலைத்தளங்களில் தளபதி விஜயின் திரைப்படங்களின் போஸ்டர்கள் வெளியானால், நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுவது வழக்கமான ஒன்று. அதே போல இத்திரைப்படத்தின் போஸ்டரை துல்கர் சல்மான் சட்டை விளம்பரத்தில் நடித்த புகைப்படத்தை வைத்து துல்கரின் உடம்பில் விஜயின் தலையை ஒட்டி கிராபிக்ஸ் செய்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

மேலும் அந்த போஸ்டரின் பின்னால் பல பில்டிங் இடம் பெற்றிருக்கும்,ஆனால் அதுவும் ஹாலிவுட் திரைப்படத்தில் இருந்து ஒரு போஸ்டரை காப்பியடித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 15 லட்ச ரூபாய் வரை வாரிசு பட போஸ்டர் டிசைனுக்கு மட்டுமே செலவு ஆகியுள்ளது.

இந்த நிலையில், ஹாலிவுட் திரைப்படத்தின் போஸ்டரை காப்பியடித்து வாரிசு திரைப்படத்தின் போஸ்டராக படக்குழுவினர் உருவாகியுள்ளது, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனையறிந்த நெட்டிசன்கள், நெல்சனாவது தமிழில் வெளியான கூர்கா திரைப்படத்தை காப்பியடித்து பீஸ்ட் படத்தை இயக்கினார்.

Rajini-vijay

ஆனால், வம்சி பைடிப்பள்ளி ஹாலிவுட் படத்தையே காப்பியடித்து, விஜயின் நடிப்பில் வாரிசு திரைப்படத்தை இயக்கி வருகிறார் என நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர். மேலும் இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியான நிலையில், அடுத்த வருடம் பொங்கலுக்கு வாரிசு படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

vijay-varisu

vijay-varisu

ஆங்கிலப் படத்தின் ரீமேக் தான் வாரிசு என்று  ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதைத் தவிர முதல் போஸ்டரில் வரும் பேக்ரவுண்ட் கூகுள் இணையதளத்தில் தேடினாலே கிடைத்து விடுகிறதாம், இப்படி மட்டமான வேலையை டிசைனர் செய்துள்ளதால் தளபதி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

blue-sattai-maran-twit

blue-sattai-maran-twit