விக்ரமை தொடர்ந்து விஜய்சேதுபதி மிரட்டும் 2 படங்கள்.. வில்லனாகவே முத்திரை குத்தியாச்சு

தமிழ் சினிமாவில் வில்லன், முதியவர், திருநங்கை என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக பொருந்தி நடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இதனால் இவருக்கு தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் வாய்ப்பு குவிகிறது.

குறிப்பாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த பிறகு அவரை வில்லனாக பார்க்கவே ரசிகர்கள் ஆசைப்படுவதாக தெரிகிறது. இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் கமலஹாசனுடன் வில்லனாக நடித்து விஜய்சேதுபதி மிரட்டியிருப்பார்.

இந்தப் படங்களுக்கு முன்பே ரஜினியுடன் பேட்ட, வேதா போன்ற படங்களிலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் விஜய் சேதுபதியை மேலும் 2 படங்களில் வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க முயற்சிக்கின்றனர். அதுமட்டுமின்றி அட்லி இயக்கத்தில் பாலிவுட் பிரபலம் ஷாருக்கான் நடித்துக் கொண்டிருக்கும் ஜவான் படத்திலும் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மேலும் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் படம் சர்வதேச அளவில் 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டை ஆடிக் கொண்டிருப்பதால், இந்த படத்தின் வெற்றிக்கு தொடர்ந்து கமலஹாசன் கிடப்பில் போடப்பட்ட படங்கள் அனைத்தையும் எடுகக்க முன் வந்திருக்கிறார்.

இதனால் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, தேவர் மகன் 2 போன்ற படங்களிலும் வில்லனாக நடிப்பதற்காக விஜய் சேதுபதியின் படக்குழுவினர் அணுகி உள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.